ஜாலி ரயிட் போறீங்களா இத கேளுங்க..
அடுத்தடுத்த அப்டேட்களை ராயல் என்பீல்டின் தாய் நிறுவனமான எய்ஷர் நிறுவனம் வெளியிட்டவண்ணம் இருக்கிறது.
மார்ச் வரையிலான காலாண்டில் அந்நிறுவனம் 2.28 லட்சம் பைக்குகளை விற்றுத்தள்ளியுள்ளது. இந்நிலையில் தனது புதிய 450 சிசி பைக்கை ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்த இருக்கிறது. அண்மையில் இதே திறன் கொண்ட ஹிமால்யன், ஷாட்கன் 650 உள்ளிட்ட பைக்குகளையும் எய்ஷர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஹிமால்யா பைக்கில் மின்சார பைக்கும் வர இருக்கிறது.இந்த மின்சார பைக் வரும் 2025-ல் சந்தைக்கு வர இருக்கிறது. 250 சிசிக்கும் அதிகமான பைக்குகளில் ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, டிரியம்ப் உள்ளிட்ட வண்டிகள் என்பீல்டுக்கு சவால் விடுக்கின்றன. போட்டிகள் அதிகம் இருந்தாலும் இந்தியாவில் ராயல் என்ஃபீல்ட் வண்டிகளின் ஆதிக்கம்தான் 85 விழுக்காடு உள்ளது. பல நாடுகளில் மந்த நிலை இருந்தபோதிலும் அங்கும் 8 விழுக்காடு அளவுக்கு அமெரிக்காவிலும், 9 விழுக்காடு ஆசிய பசிபிக் , ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் கணிசமான அளவில் தனது இருப்பை உறுதி செய்துள்ளது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். அடுத்த சில மாதங்களில் ஹிமால்யன் 450, சூப்பர் மெட்டியோர் ஆகிய ரக பைக்குகளை அமெரிக்காவில் விரைவில் எய்ஷர் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. எய்ஷர் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான வால்வோ குழுமம் கடந்த நிதியாண்டில் மட்டும் 823 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளனர். எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்தாண்டில் இதுவரை மட்டுமே 14 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இது மேலும் உயரும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.