ஆடிய ஆட்டம் என்ன??டமாலென விழுந்த தங்கம் விலை..
இந்திய பங்குச்சந்தைகள், ஏப்ரல் 23 ஆம் தேதி லேசான ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 89 புள்ளிகள் உயர்ந்து 73,738 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி31 புள்ளிகள் உயர்ந்து 22,368 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. கடைசி நேரத்தில் லாபத்தை பதிவு செய்ய முதலீட்டாளர்கள் முடிவெடுத்ததால் பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. தேசிய பங்குச்சந்தையில்Grasim Industries, Bharti Airtel, Nestle India, Maruti Suzuki, HCL Technologiesஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல்Sun Pharma, BPCL, Reliance Industries, M&M and Hindalco Industriesஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. சுகாதாரத்துறை, உலோகம், எண்ணெய் ,எரிவாயுத்துறை மற்றும் ஆற்றல் துறை பங்குகள் 0.3 முதல் 0.8 விழுக்காடு வரை சரிவை கண்டன. மின்சாரத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, ரியல் எஸ்டேட் ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகள் 0.4 முதல் 2 விழுக்காடு வரை உயர்வில் முடிந்தன. Aditya Birla Capital, Amara Raja Batteries, Arvind, Bharti Airtel, Cochin Shipyard, Cummins India, Eicher Motors, Grasim Industries, Indraprastha Gas, LIC Housing Finance, Maruti Suzuki, Max Financial, MOIL, Sobha, Sterling Wilson, Sudarshan Chemicals, Tejas Networks, Voltas உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் 1160 ரூபாய் விலை குறைந்து 53ஆயிரத்து 600 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6700 ரூபாயாக உள்ளது.வெள்ளி விலை, கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைந்து 86 ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை 86 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.