52ஆயிரம் ரூபாயை நெருங்கும் தங்கம்.
தங்கம் விலை என்ன இப்படி ஆட்டம் போடுது என்று சாதாரண மக்கள் புலம்பும் அளவுக்கு தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு சவரன் 51 ஆயிரத்து 640 ரூபாயை எட்டியுள்ளது. சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 6455 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை,கிராமுக்கு60காசுகள் உயர்ந்து 81 ரூபாய் 60 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 600ரூபாய் உயர்ந்து 81 ஆயிரத்து 600 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். இந்திய பங்குச்சந்தைகள், 2024-25 நிதியாண்டின் முதல் வர்த்தக நாளில் சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 363 புள்ளிகள் உயர்ந்து 74,014 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி135 புள்ளிகள் உயர்ந்து 22,462புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. துவக்கத்தில் இருந்தே பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச்சந்தையில் Tata Steel, JSW Steel, Adani Ports, Shriram Finance, Divi’s Labs ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Eicher Motors, Titan Company, Bajaj Auto, LTIMindtree and Nestle ஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. ஆட்டோமொபைல் துறை தவிர்த்து உலோகம், ஆற்றல்துறை, ரியல் எஸ்டேட், பங்குகள், பங்குகள் 1 முதல் 4 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன . எண்ணெய் மற்றும் கேஸ் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வங்கி உளளிட்டத்துறை பங்குகள் அரைவிழுக்காடும் உயர்ந்து வர்த்தகமாயின, Action Construction, BASF, Cochin Shipyard, Cummins India, DLF, Dynamatic Technologies, Glenmark Pharma, Gujarat Pipavav, Indian Hotels, Indus Towers, Jindal Steel, Muthoot Finance, Oracle Financial Services, Tata Steel, Triveni Turbine, Voltas, உள்ளிட்ட 1050 நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன.