தீபாவளிக்கு முன்பு வெளியாகிறது மொபிக்விக்கின் ஐ.பி.ஓ !
மின்னணுப் பணப்பரிமாற்ற சேவைகளை வழங்கும் மொபிக்விக் (Mobikwik) நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ₹1900 கோடி ($255 million) நிதி திரட்ட செபியிடம் (SEBI) இருந்து அனுமதி பெற்றிருப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மொபிக்விக்கின் இந்த ஐ.பி.ஓ வானது தீபாவளிக்கு (நவம்பர் 4) முன்னதாக வெளியாக வாய்ப்பிருக்கிறது, புதிய பங்குகளின் மூலம் ₹1500 கோடியும், ₹400 கோடி பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனர்களுக்கு சலுகை விலையில் விற்பதன் மூலமும் திரட்டப்படும். இந்த ஐ.பி.ஓ வின் மூலம் நிறுவனத்தின் மதிப்பீடு 1 பில்லியனாக மாறும் என்று சந்தை நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.