கௌரவத்தின் பின் ஓடாதீர்கள் – டேவிட் பெரல்
நான் என்னையே பலமுறை கேட்டிருக்கிறேன்: “என்னுடைய தகுதிக்கு கௌரவமானதில்லை என்று பல நல்ல வாய்ப்புகளை நான் ஏன் தவிர்க்கிறேன்?”
மிகச்சிறந்த வாய்ப்புகள் பெரும்பாலும் கௌரவமானதாக இருப்பதில்லை, மிகப்பெரிய அளவில் பணத்தோடு தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே அப்படி நடக்கும். நான் பார்த்த பல பெரிய மனிதர்கள் கௌரவத்தின் மீது மிகப்பெரிய ஈர்ப்புக் கொண்டவர்கள், மிகப்பெரிய, புகழ்பெற்ற குடும்பங்களில் பலர் கௌரவத்தை மிகப்பெரிய விஷயம் என்று நினைத்தார்கள், அது வேலையாகட்டும், குழந்தைகளாகட்டும், கெளரவம் அவர்கள் வாழ்க்கையில் முதலிடம் பெற்றிருந்தது. மற்றொரு புறம், இவர்கள் உற்சாகமான ஆனால், பெரிய கெளரவம் ஏதுமில்லாத திட்டங்களில் வேலை செய்வார்கள்.
நீங்கள் உண்மையில் உங்கள் சக மனிதர்களை தரத்தின் அடிப்படையில் வெற்றி கொள்ளவில்லை, அவர்கள் குறைந்த தரத்தோடு இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதன் மூலம் வெற்றி கொள்கிறீர்கள், இதைப் பிறர் அறிந்திருக்கவில்லை என்பதுதான் விஷயம்.” என்கிறார் எனது நண்பர் ஜஸ்டின் மர்பி.
அனைவரும் உயர் கௌரவத்தோடு வாழ விரும்புகிறார்கள், பொருளாதார லாபங்களைக் கடந்து, வெகு சிலரே கெளரவக் குறைவான வேலைகளை செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். அப்படியான வேலைகளை செய்வதன் மூலமாக நாம் உயர் கௌரவத்தை நோக்கிப் பயணிக்க முடியும் என்று தெரிந்தும் அவர்கள் அப்படியான வேலைகளை செய்வதற்குத் தயாராக இல்லை. இப்போது பிட்காயின்களின் பின்னால் ஓடும் பலர், சில ஆண்டுகளுக்கு முன்னாள் டிஜிட்டல் பணத்தைப் பற்றிப் பேசிய போது ஏளனமாகப் பார்த்தார்கள்.
ரெனே ஜிரார்ட்டை படித்த பிறகுதான் நான் கௌரவத்தை துரத்திச் செல்வது எவ்வளவு ஆபத்தானது? என்று புரிந்து கொண்டேன், ஒரு புலப்படும் பொருளுக்காக போட்டியிடாத போதுதான் வாழ்க்கையில் மோசமான போட்டிகளை நாம் சந்திக்கிறோம், மனம் அப்போதுதான் தனக்குள் கருத்துக்களோடு மோதுகிறது, விமர்சனங்களை எதிர்கொள்கிறது. சொல்லப்போனால், கௌரவம் என்கிற சொல்லின் ஆங்கில வடிவமான Prestige இன் மூலச்சொல்லான லத்தீனின் Praestigiae என்பதன் பொருள் மாயை அல்லது மாயத்தோற்றம் என்பதுதான்.
இந்த உலகம் முழுவதும் குறைத்து மதிப்பிடப்படும் அப்படியான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கிறது, கெளரவக் குறைவான வேலைகளை எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்யத் தயாராக இருப்பவர்களுக்கு மட்டும்தான் அந்த வாய்ப்புகள் கிடைக்கும்.
கௌரவத்தின் பின்னால் ஓடாதீர்கள், அது ஆபத்தானது.