உங்கள் அன்பானவர்கள் முகத்தில் என்றும் புன்னகை மலர வேண்டுமா, ஒரு “டேர்ம் இன்சூரன்ஸ்” பாலிசியை இன்றே வாங்குங்கள் – ஆனந்த் ஸ்ரீனிவாசன்
பெரும்பான்மையான இந்தியர்கள், நடுத்தர வயதில் குடும்பம், குழந்தைகள் என்று செலவுகள் வருமானத்தை விழுங்கி பற்றாக்குறை நிகழத் துவங்கும் போதுதான் சேமிப்பு அல்லது காப்பீடு போன்ற விஷயங்கள் இருப்பதே அவர்களுக்குத் தெரிய வருகிறது. உங்கள் குடும்பங்களுக்கு நிதி மற்றும் மன அளவிலான பாதுகாப்பை வழங்குவது “டேர்ம் இன்சூரன்ஸ்” திட்டங்கள் என்றால் அது மிகையில்லை. முதலில் யாருக்கு “டேர்ம் இன்சூரன்ஸ்” தேவைப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும், “டேர்ம் இன்சூரன்ஸ்” பொதுவாக அனைவருக்கும் தேவைப்படுகிறதா? என்றால், இல்லை என்பதுதான் உண்மை, சொந்த வீடு, நிலையான வருமானம், ஓரளவு சொத்துக்கள் என்று வசதியான நிலையில் இருப்பவர்களுக்கு “டேர்ம் இன்சூரன்ஸ்” தேவைப்படாது.
ஆனால், நிலையான வருமானம் இல்லாதவர்கள், சொந்தமாக வீடு இல்லாதவர்கள், பெரிய அளவில் சேமிப்போ, சொத்துக்களோ இல்லாதவர்களுக்கு உறுதியாக ஒரு “டேர்ம் இன்சூரன்ஸ்” மிகப்பெரிய பாதுகாப்பை வழங்கும். நீங்கள் சேமிப்பு வைத்திருந்தாலும் கூட வாழ்வின் எதிர்பாராத தருணங்கள் அந்தப் பணத்தை விழுங்கி விடும், வீட்டுக் கடன், குழந்தைகளின் கல்வி, கார், திருமணம், மருத்துவ செலவுகள், வீட்டு சீரமைப்பு என்று செலவுகள் தொடர்கதையாகவே இருக்கும், நீங்கள் ஓய்வு பெறும் வரை ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொண்டே இருந்தால் மட்டுமே இவை அனைத்தும் ஒழுங்காக நடக்கும்.
30 வயதான ஒருவர் 1 கோடி ரூபாய்க்கான டேர்ம் இன்சூரன்ஸ் கவர் திட்டத்தை அடுத்த 30 வருட காலத்திற்கு மாதம் 600-1000 ரூபாய் பிரிமியம் செலுத்துவதன் மூலம் பெற முடியும், உங்கள் மறைவுக்குப் பின்னரும் உங்கள் குடும்பத்திற்கு உறுதியான பாதுகாப்பை வழங்க முடிவதே “டேர்ம் இன்சூரன்ஸ்” திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். “டேர்ம் இன்சூரன்ஸ்” திட்டங்களை குறைந்த வயதிலேயே வாங்கி விடுவது மிகுந்த பாதுகாப்பானது, நவீன உலகில், வாழ்க்கை முறையினால் உண்டாகும் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம், பார்க்கும் வேலைகளில் இருக்கும் அழுத்தம், வேகம் காரணமாக இதுபோன்ற நோய்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிர்ஷ்டமான சூழல் நடுத்தர இந்தியர்கள் அனைவருக்கும் இருக்கிறது.
நோய்வாய்ப்பட்ட பிறகு இன்சூரன்ஸ் எடுக்க நினைத்தால் காப்பீட்டு நிறுவனங்கள் உங்களுக்கு காப்பீடு வழங்க மிகுந்த தயக்கம் காட்டும் அல்லது உங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களின் தன்மையைப் பொறுத்து பிரீமியங்களை அதிகரிக்கும் என்பதால் பாலிசி மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். எனவே, நீங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்போது திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சிக்கலான நோய் மற்றும் விபத்துகளால் ஏற்படும் செயலிழப்பு போன்ற நிகழ்வுகளில் இருந்து உங்களைக் காக்கும் ஆபத்பாந்தவனாக “டேர்ம் இன்சூரன்ஸ்” திட்டங்கள் இருக்கிறது. உங்களுக்கு இப்போது ஒரு நல்ல வேலை இருக்கிறது என்றால், பிரீமியங்களை செலுத்தி, நீங்கள் இத்தகைய திட்டங்களை வாங்கலாம், வேலைப் பாதுகாப்பு என்பது மிகவும் குறைவாக உள்ள இன்றைய சூழலுக்கு இத்தகைய திட்டங்கள் பெருமளவில் கைகொடுக்கும்.
பெரும்பாலான “டேர்ம் இன்சூரன்ஸ்” திட்டங்கள் வரி விலக்கு, வரி சேமிப்பு போன்றவற்றை உள்ளடக்கி இருக்கிறது. “டேர்ம் இன்சூரன்ஸ்” திட்டங்கள் புரிந்து கொள்வதற்கு மிக எளிமையானவை, மிகக்குறைந்த அளவில் பிரீமியம் செலுத்தும் வகையில், நடுத்தர இந்தியர்களால் எளிதில் பெற முடியும் “டேர்ம் இன்சூரன்ஸ்” திட்டங்கள் ஏராளமாக சந்தையில் கிடைக்கிறது, வழக்கமான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை விட பல “டேர்ம் இன்சூரன்ஸ்” திட்டங்கள் மிக அதிக அளவில் இழப்பீட்டுத் தொகை வழங்கும். உங்கள் அன்பானவர்கள் முகங்களில் மாறாத புன்னகையை பார்க்க விரும்பும் மனிதரா நீங்கள், உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது, ஒரு பாதுகாப்பான, அதிக இழப்பீடு வழங்கக்கூடிய “டேர்ம் இன்சூரன்ஸ்” திட்டத்தை இன்றே வாங்கி விடுங்கள்.
உங்களுக்கு “டேர்ம் இன்சூரன்ஸ்” தேவைப்படுமா என்பதை அறிந்து கொள்ளவும், “டேர்ம் இன்சூரன்ஸ்” குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ளவும் திரு.பத்மநாபன் அவர்களை 7305047914 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.