பாலிசி பஜார் – IPO இன்று துவங்கி நவம்பர் 3 வரை !
சந்தையில் ₹ 5,625/- கோடி நிதி திரட்டும் நோக்கில் PB Fintech (பாலிசி பஜார்) ஐ.பி.ஓ இன்று வெளியாகி விற்பனையாகிறது, இன்று முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை பங்குகளை வாங்கலாம், இந்தப் பங்குகளின் துவக்க நிலை சலுகை விலை ₹940 முதல் ₹980 வரை இருக்கும், ஒரு லாட்டில் 15 பங்குகள் இருக்கும், ஒரு பங்கின் முகமதிப்பு ₹ 2, மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் பட்டியிலடப்பட்டிருக்கிறது.
துவக்க நிலை சலுகை (IPO) துவக்கம் / முடிவு ISSUE OPEN & CLOSE DATES | Nov – 1 to Nov 3, 2021 |
துவக்க நிலை சலுகை விலை IPO PRICE RANGE | ₹940 முதல் ₹980 வரை |
ஒரு லாட்டின் அளவு IPO LOT SIZE | 15 பங்குகள் |
நிதி திரட்டல் இலக்கு ISSUE SIZE | ₹ 5,625 கோடி |
ஒரு பங்கின் முகமதிப்பு FACE VALUE PER EQUITY SHARE | ₹ 2 |
பட்டியல் | BSE மற்றும் NSE சந்தைகள் |
தொழில்நுட்பம், டேட்டா மற்றும் சந்தையின் ஆற்றலைப் பயன்படுத்தி காப்பீடு மற்றும் கடன் வழங்கும் திட்டங்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ள நிறுவனம் பாலிசி பஜார். பாலிசிபஜார் மற்றும் பைசாபஜார், காப்பீடு, கடன் மற்றும் பிற நிதித் திட்டங்களுக்கான வாய்ப்புகளை ஓரிடத்தில் வழங்கும் சேவைக்கான முதன்மையான ஆன்லைன் சேவைகளை வழங்குகிறது PB Fintech.
பாலிசிபஜார்:
முதன்மை ஆன்லைன் தளமான பாலிசிபஜார் 2008 இல் துவங்கப்பட்டது, 2020 ஆம் ஆண்டில், பாலிசிபஜார் இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் விற்பனைத் தளமாக இருந்தது. இந்தியாவில் உள்ள அனைத்து டிஜிட்டல் காப்பீட்டு திட்டங்களின் விற்பனையில் 65.3% பாலிசிபஜார் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாலிசிபஜார் ஐஆர்டிஏஐ (IRDAI) யால் நேரடி (ஆயுள் மற்றும் பொது) காப்பீட்டு தரகராக பதிவு செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுகிறது
பைசாபஜார்:
2014 ஆம் ஆண்டில், பல்வேறு தனிநபர் கடன்கள் வாங்க, கடன் அட்டைகளைத் தேர்தெடுக்க எளிதாகவும், வசதியாகவும், வெளிப்படைத் தன்மையை வலியுறுத்துவதன் மூலம் இந்தியர்கள் தனிப்பட்ட கடன்களை அணுகும் முறையை மாற்றும் நோக்கத்துடன் பைசா பஜார் உருவாக்கப்பட்டது. பைசாபஜார் இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் நுகர்வோர் கடன் சந்தையாக இருக்கிறது, 51.4% சந்தை பங்கைக் கொண்டுள்ளது.