இந்தியாவில் புத்துணர்வு பெறுமா கார் விற்பனை?
சிப்கள் மற்றும் செமிகண்டக்டர் போன்றவற்றின் தட்டுப்பாட்டால் புதிய வகை கார்களை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவித்தாலும், சொந்தமாக கார் வேண்டும் என்ற சராசரி இந்தியனின் கனவை நிறைவேற்றுவதில் கார் விற்பனை ஒரு எழுச்சியை காண்கிறது. அடுத்த ஐந்து வருடங்களில் புதிய கார்களின் விற்பனை ஒன்றரை மடங்கு அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏனெனில் கார் வாங்கும் தனிப்பட்ட விருப்பம் e-commerce மற்றும் விளம்பரங்கள் உள்ளிட்டவை இதன் வளர்ச்சியை தூண்டுகின்றன.
நடப்பாண்டில் 1.4 மடங்கு அதிகமாக புதிய காரின் விற்பனை இருந்தது என்று ஓலா- ஆட்டோ ஆய்வு தெரிவிக்கின்றது, 2021-22க்குள் இதன் மதிப்பு 20-22 சதவீதமாக இருக்கும் என்றும், 2025- 26க்குள் 30 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, சுமார் 1000 கோடி மதிப்பிலான பொது பட்டியலுக்காக மூலதனச் சந்தையில் நுழையவிருந்த ஸ்டார்ட்-அப்களில் ஆன்லைன் ஆட்டோமொபைல் புதியது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன
உண்மையை சொல்லவேண்டும் என்றால், covid-19 பொருளாதாரத்தை கடுமையாக தாக்கியது. ஓலா அல்லது உபர் மூலம் பயணம் செய்த பெரும்பான்மையோர் கார் வாங்க சந்தைக்கு வந்தனர். இவர்களில் பலர் முதல் முறையாக கார் வாங்குபவர்கள், டிஜிட்டல் வியாபாரமானது 2019 இல் பயன்படுத்திய கார்களின் விளம்பரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பயனர்களின் எண்ணிக்கையில் 30 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது, மகேந்திரா குழுமத்தின் பயன்படுத்தப்பட்ட கார் வணிகமான மகேந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீலில் புதன்கிழமை தந்தரேஸில் 1028 யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் இறுதிவரை கார் விற்பனை அதிகரிக்கும் என்று கருதுகின்றனர், சிலர் கவர்ச்சிகரமான திட்டங்களை வழங்குவதன் மூலம் திருவிழா கால விற்பனையை அதிகம் பயன்படுத்த முயல்கின்றனர்
பயன்படுத்தும் வாகனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும், 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கார் வாங்குபவர்களுக்கு ஆறுமாத உத்திரவாதமும் அளிக்கின்றனர், ரொக்க தள்ளுபடிகள் கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் இலவச வாகன உதிரிபாகங்கள் போன்ற அற்புதமான சலுகைகளுடனும், புதிய வாகனங்களுக்கு 30,000 வரை கேஷ்பேக்கும் வழங்குகின்றன. இதற்கிடையில் புதிய கார் சந்தையில் உள்ள போக்கை பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்திய கார் விற்பனையாளர்கள் ஹேட்ச்பேக் மற்றும் ஸ்போர்ட்ஸ் வாகனங்களுக்கான தேவை குறிப்பாக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கூடிய கார்களை பெருமளவில் பயனாளிகள் தேர்வு செய்கிறார்கள்.
OLX-CRISIL ஆய்வுப்படி பயன்படுத்திய வாகனங்களின் பங்கு, புதிய கார்களோடு ஒப்பிடும்போது, 2017-18 இல் 17% ஆக இருந்து நடப்பு நிதியாண்டில் 20 % அதிகரித்துள்ளது, நிதியாண்டு 2015-20 காலகட்டத்தில் புதிய கார் விற்பனை 1.3 சதவீதம் வருடாந்திர வளர்ச்சி விகிதம் என்ற அளவில் குறைவாகவே இருந்தது. அதே சமயம் புதிய கார் தொழிலானது 13% வளர்ச்சியையும் பதிவு செய்தது, நடப்பாண்டில் புதிய கார் விற்பனையில் தடைகள் பல இருக்கின்றன. அதனால் கார் விற்பனை மந்தமாக இருக்கிறது என்று வணிக வல்லுனர்கள் கருதுகின்றனர்.