முதலீடு செய்ய ஏற்றதா “ஃபார்ம் ஈஸி” யின் ஐபிஓ?
இந்திய டிஜிட்டல் ஹெல்த் கேர் நிறுவனமான “ஃபார்ம் ஈஸி” 842 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓவினை புதன்கிழமை வெளியிட்டது. மருத்துவ ஆலோசனையில் இருந்து ரேடியாலஜி சோதனை வரை இந்த நிறுவனம் தொலைபேசி வாயிலாகவும் நேரடியாகவும் பல்வேறு ஆலோசனை வழங்குகிறது. வீட்டிற்கு மருந்துகளை விநியோகம் செய்வது கூட இந்த நிறுவனத்தின் சேவைகளில் ஒன்றுதான், ஜூன் 30 வரையிலான காலாண்டில் இதன் விற்பனை 30.26 பில்லியன் ரூபாயாக இருந்தது.
“ஃபார்ம் ஈஸி”யின் தாய் நிறுவனமான API ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் குறிப்பிடுகையில், “நாங்கள் IPO மூலமாக 12.5 பில்லியன் ரூபாய் ஈக்விட்டி பங்குகளாக்க ஆலோசனை செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ முதலீடு செய்ய ஏற்றதா? சில்லறை முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபமீட்ட முடியுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளது.
பொதுவாகவே பார்மசி நிறுவனப் பங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பாகவே செயல்பட்டு முதலீட்டாளர்களுக்கு ஓரளவு லாபம் ஈட்டிக் கொடுத்திருக்கிறது, API ஹோல்டிங் நிறுவனத்தின் முந்தைய கால செயல்பாடுகள் மற்றும் “ஃபார்ம் ஈஸி”யின் நிலைத்தன்மையைக் கணக்கில் கொண்டால் இந்த ஐ.பி.ஓ வில் முதலீடு செய்வது பெரிய இழப்பைத் தராது என நிபுணர்கள் கருதுகிறார்கள்.