மூன்றாகப் பிரிகிறது தோஷிபா கார்ப்போரேசன்?
உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய தொழில் நிறுவனமான தோஷிபா கார்ப்போரேசன் 3 நிறுவனமாக பிரிகிறது. உள்கட்டமைப்பு, மெமரி ‘சிப்’ கள் மற்றும் சாதனங்கள் தயாரிப்புகளில் இந்த நிறுவனம் 3 நிறுவனங்களாக பிரிகிறது என்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிர்வாக ஊழலுக்கு பிறகு நிறுவனத்தை மூன்றாகப் பிரித்து பங்குதாரர்களின் மதிப்பை மேம்படுத்தவும், நன்மதிப்பை உயர்த்தும் எனவும் தெரிகிறது.
அதன்படி அணு சக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஒரு நிறுவனமாகவும், ‘சிப்’கள், ஹார்ட் டிஸ்க்குகள் தயாரிக்க மற்றொரு நிறுவனமாகவும் பிரிக்கப்படும். மூன்றாவது நிறுவனத்தை மெமரி சிப்கள் தயாரிக்கும் கியோக்ஸ் வைத்திருக்கும். பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத இந்த நிறுவனம் தோஷிபாவின் 40.6 சத விகித பங்குகளை கொண்டிருக்கும்.
எனினும் நிறுவனத்தை மூன்றாகப் பிரிப்பது என்பது பரிசீலனை நிலையில் தான் உள்ளது என்று கூறிய நிறுவனத்தின் உயரதிகாரி மேலும் அதுகுறித்த விவரங்களை கூற மறுத்துவிட்டார். காலாண்டு நிதி அறிக்கை, கார்ப்பரேட் ஆளுமை அறிக்கையின் முடிவு ஆகியவற்றுக்கு பின் நிறுவனத்தை மூன்றாக பிரிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. ஆனால் தோஷிபா நிறுவனத்தின் இந்த முடிவை முதலீட்டாளர்களில் ஒரு பகுதியினர் ஏற்கவில்லை.
தோஷிபா நிர்வாகம் மற்றும் அதன் வெளிநாட்டு பங்குதாரர்களின் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் தான் ஜப்பானிய செய்தி ஊடகங்களில் கடந்த சில மாதங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பங்குதாரர்களால் ஏற்படுத்தப்பட்ட விசாரணை அமைப்பு, பங்குதாரர்கள் கூட்டத்தில் முதலீட்டாளர்கள் செல்வாக்கு பெறுவதை தடுக்க கடந்த ஆண்டு ஜப்பானின் வர்த்தக அமைச்சகத்துடன் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது என்று குற்றம் சாட்டியது.
ரெபைநிட்டிவ் நிறுவனத்தின் கூற்றுப்படி தோஷிபா நிறுவனம், சராசரி மதிப்பீடுகளின்படி ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் தொடக்க வர்த்தகமாக 37.7 பில்லியன் யென்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது