பறக்கத் தயாராகும் ஆகாஷ் | 72 போயிங் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் !
அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடமிருந்து 72 புதிய விமானங்களை வாங்க இந்தியாவின் ஆகாஷ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் செயல்பட மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை தடையில்லா சான்றிதழை கடந்த மாதம் வழங்கியது. இந்த விமான நிறுவனத்தை, முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, இண்டிகோ முன்னாள் தலைவர் ஆதித்யா, ஜெட் ஏர்வேஸ் முன்னாள் சிஇஓ வினைத் ஆகியோர் இணைந்து நடத்த உள்ளனர்.
போயிங் 737 ரக விமானங்கள் குறைந்த எரிபொருளில் மிகச் சிறப்பாக இயங்கக் கூடியவை. குறைந்த கட்டணத்தில் பயணிகளுக்கு சேவை வழங்கவும், அதேநேரத்தில் விமான நிறுவனம் லாபத்தில் இயங்குவதற்குகாகவும் இந்த ரக விமானங்களை வாங்குவதாக நிறுவனம் கூறியுள்ளது. அண்மையில் துபாயில் நடந்த விமான கண்காட்சி 2021 இல் அமெரிக்காவின் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் இடமிருந்து புதிதாக 72 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை 66,000 கோடி மதிப்பில் வாங்க ஆகாஷ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது