மொபைல் சேவை இல்லாத 7,287 கிராமங்கள், 4G இணைப்பைப் பெற மத்திய அரசு ஒப்புதல் !
ஐந்து மாநிலங்களில் இதுவரை கைபேசி சேவை வசதி இல்லாத 7,287 கிராமங்களில் ரூபாய் 6, 466 கோடி மதிப்பீட்டில் கைபேசி இணைப்பு வழங்குவதற்காக உலகளாவிய சேவை கடமை நிதியை( USOF) பயன்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ” ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில் உள்ள இந்த கிராமங்கள் இதன் மூலம் 4G அடிப்படையிலான மொபைல் சேவைகளை பெறும் என்றார்.
மொபைல் சேவைகளை வழங்குவதற்கான இந்த மேம்பட்ட தொழில்நுட்ப சேவை பயனுள்ள வகையில் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி இணைப்பை எளிதாக்க உதவும். தகவல் மற்றும் அறிவு திறன் மேம்பாடு, மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் ஆற்றலை மேம்படுத்தும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 6, 466 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கான செயல்பாட்டு செலவுகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..