ஜீ மற்றும் சோனி இணைப்புப் பணிகள் மும்முரம்!
ஜீ என்டர்டெய்ன்மெண்ட் & என்டர்பிரைசஸூம், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா லிமிடெட்டும் விரைவில் இணைய போகின்றன, அதற்கான கடைசி கட்ட பணிகளில் இருக்கிறோம்” என்று ஜீ டிவியின் மேலாண்மை இயக்குனரும், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான புனித் கோயங்கா தெரிவித்தார்.
ஏபிஎஸ் இந்தியா லிமிட்டட் விழாவில் பேசும்போது அவர் இதனை தெரிவித்தார். இந்த இணைப்பின் மூலமாக பொழுதுபோக்குத் துறை வளம் பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “ஜீயும், சோனியும் நாட்டின் பொழுதுபோக்கு துறையில் பெரிய நிறுவனமாக வளரும் என்றார். இரண்டு நிறுவனத்தின் நிகர மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் டாலர் ஆகும்” என்று தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு ஜீ டிவி தனது விளையாட்டு தொடர்பான டிவியை, டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு 2,400 கோடி ரூபாய்க்கு விற்றது. இரண்டு நிறுவனமும் இணைந்து விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் என்று குறிப்பிட்டார்.