வங்கிக் கடன்களுக்கு “கல்தா” ! கடன் நிலுவைத் தொகை 62,970 கோடியாக கிடுகிடு அதிகரிப்பு !
வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தத் தவறுபவர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர் என்று இந்திய வங்கிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வேண்டுமென்றே கடனை கட்டாதவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வின்படி பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து நிலுவையில் உள்ள கடன்களின் மதிப்பு ரூ.62,970 கோடி அல்லது சுமார் 10 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2019 டிசம்பரில் ரூ.6.22 டிரில்லியனில் இருந்து, ஜூன் மாதத்தில் மொத்த நிலுவை தொகை ரூ.6.85 டிரில்லியன் ஆக அதிகரித்துள்ளது. வேண்டுமென்றே கடன் கட்டத் தவறிய கடனாளிகளின் தொகை கோவிட் தொற்றுக்கு பிறகு சுமார் 7.6 டிரில்லியன் ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாத, வங்கியில் இருந்து பணம் வாங்கிய ஒரு நிறுவனம், திரும்பிச் செலுத்துவதற்கான வழிவகை இருந்தபோதிலும் திருப்பிச் செலுத்தவில்லை. ஜூன் மாதம் வரை இதுபோன்ற 26,022 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜூன் 2021 எண்ணிக்கையை ஜூன் 2019 உடன் ஒப்பிட்டால் நிலுவையில் உள்ள தொகை அதிகரிப்பு அதிகமாக உள்ளது. 2019 இல் 24,175 வழக்குகள் இருந்தன, மொத்தம் ரூ.5.5 டிரில்லியன் நிலுவையில் இருந்தது.
ரூ.5.3 டிரில்லியன் நிலுவையில் உள்ள மொத்த தொகையில், பொதுத்துறை வங்கிகளில் மட்டும் ஜூன் வரை 77.4 சதவீதமாக இருந்தது. பொதுத்துறை வங்கிக் கடனில் பெரும் பங்கைக் கொண்டதாகவும் இந்த நிலுவைத் தொகை உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஜூன் 2021 தரவுகளின்படி, இது மொத்த கடனில் 58 சதவீதத்தைக் கொண்டுள்ளது.