மதர் ஸ்பார்ஷில் முதலீடு செய்யும் ஐடிசி !
இந்தியாவில் விற்பனைத் துறையில் பிரபல நிறுவனமான ஐடிசி (ITC), மதர் ஸ்பார்ஷில் (MOTHER SPARSH) தாய் மற்றும் குழந்தை பராமரிப்புப் பிரிவில் முதலீடு செய்யும் என்று நிறுவனத்தின் தகவல் தெரிவிக்கிறது. நுகர்வோர் பிராண்டான மதர் ஸ்பார்ஷில் 16 சதவீத பங்குகளை ₹ 20 கோடிக்கு வாங்குவதாக, ஐடிசி வெள்ளிக்கிழமை அறிவித்தது. ஐடிசி கடந்த சில ஆண்டுகளாக சிகரெட் அல்லாத எஃப்எம்சிஜி வணிகத்தில் கவனம் செலுத்தி வருகிறது.
மதர் ஸ்பார்ஷ், அதன் சீரிஸ் A நிதிச் சுற்றில் திரட்டப்பட்ட நிதியை – ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள், டிஜிட்டல் திறன்கள் மற்றும் புதிய தயாரிப்பு வெளியீடுகளை மேம்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் அந்த பிராண்டின் இணையதள விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. நிறுவனம் தற்போது ஆன்லைன் சேனல்கள் மூலம் அதன் விற்பனையில் 85 சதவீதத்திற்கும் மேல் பதிவு செய்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை 25 சதவீதத்திற்கும் மேலாக பன்முகப்படுத்தியுள்ளது,” என்று மதர் ஸ்பார்ஷ் இணை நிறுவனர் ரிஷு காந்தி கூறினார். இந்த நிதி திரட்டும் செயல்முறைக்கு ஐடிஐ கேபிடல், மதர் ஸ்பர்ஷின் நிதி ஆலோசகராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.