கிராமப்புற நுகர்வில் வீழ்ச்சி – நீல்சன் அறிக்கை
மூலப்பொருட்களின் விலை உயர்வு, தயாரிப்புச் செலவு அதிகரிப்பு மற்றும் போதுமான வருமானம் இல்லாதது போன்ற காரணிகளால் கிராமப்புற நுகர்வு குறைந்து இருக்கிறது என்று நீல்சன் அறிக்கை தெரிவிக்கின்றது.
2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், கிராமங்களில் தேயிலை முதல் ஷாம்பு வரையிலான சிறு வணிகர்களின் விற்பனை பொருட்களின் வளர்ச்சி விகிதம் 9.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. நீல்சன் தரவுகளின்படி எண்ணெய் வகைகள், மளிகை பொருட்கள், மற்றும் தனிநபர் ஒப்பனை பொருட்கள் முதலியவற்றில் ஒரு சரிவை பதிவு செய்துள்ளது.
இதனால் நுகர்வு கலாச்சாரம் சிறிய தயாரிப்பாளர்களை மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களில் 14 சதவீதம் பேர் தங்கள் உற்பத்தி கூடத்தை மூடிவிட்டனர். பெரிய நிறுவனங்கள் சந்தையில் இருக்கும் அவர்களின் பங்குகளை பிரித்துக் கொண்டன என்றால் மிகையாகாது. எண்ணெய் , தேநீர் மற்றும் பேக்கரி பொருட்கள் ,அரிசி, பட்டர் மார்ஜரின், சாக்லேட் உள்பட இந்த விலை உயர்வு அதிகரித்துள்ளது.