“ரேட்கெய்ன்” – IPO – சலுகை விலை எவ்வளவு?
ரேட்கெய்ன் டிராவல் டெக்னாலஜிஸ் லிமிடெட் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முகமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூபாய் 1,335.70 கோடியை திரட்டுவதற்காக ஐபிஓ வெளியீட்டைத் துவங்கி வைத்தது. இந்த ஐபிஓ நாளை முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை 405 ரூபாயில் இருந்து 425 ரூபாய் வரை இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கு பிந்தைய ஈக்விட்டி பங்கு மூலதனம் 29.44 சதவீதம் இருக்கும் என்றும், நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் 56.2 சதவீதத்தை வைத்திருப்பார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ரேட்கெய்ன் நிறுவனம், கடந்த இரண்டு நிதியாண்டுகளிலும், ஆகஸ்ட் மாதத்தடன் முடிந்த ஐந்து மாதங்களிலும் நஷ்டத்தையே காட்டியுள்ளது. இந்நிறுவனம் விருந்தோம்பல் துறையிலும், பயண ஏற்பாடுகள் துறையிலும் உலகளாவியரீதியில் பெயர் பெற்றது.