ஹெச்பி அட்ஹெஸிவ் IPO !
ஹெச்பி அட்ஹெசிவ் நிறுவனம் ஐபிஓவை வெளியிடுகிறது. ஆஃபர் காலம் டிசம்பர் 15 முதல் 17 வரை. இந்த டிசம்பரில் வெளியாகும் 10வது ஐபிஓவாக இது இருக்கும். புதிய வெளியீடு 41.4 இலட்சம் பங்குகளாக இருக்கும். ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் 4.57 பங்குகள் ஆஃப் லோடிங் பங்குகளாக இருக்கும்.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் மகாராட்டிரா மாநிலம் நரங்கியில் உள்ள நிறுவனத்தில் தற்போதைய வசதிகள், மற்றும் கூடுதல் யூனிட்டில் உள்ள உற்பத்தி திறனை விரிவாக்கம் செய்தல், மேலும் செயல்பாட்டு மூலதனத் தேவைக்கும் செலவிடப்படும்.