பேமெண்ட்ஸ் வங்கி என்றால் என்ன?
பேமெண்ட்ஸ் வங்கி என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய மாதிரி வங்கியாகும். இந்த வங்கிகள் இந்தியாவில் உள்ள பாரம்பரிய வங்கிகளிலிருந்து வேறுபட்டவை. இந்தியாவில் செயல்படும் 11 நிறுவனங்களுக்கு வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949ன் கீழ் புதிய பேமெண்ட்ஸ் வங்கியை உருவாக்குவதற்கான கொள்கை அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. 11 பேமெண்ட்ஸ் வங்கிகளுக்கு அனுமதி வழங்கியபோதும் தற்போது, இந்தியாவில் 6 வங்கிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் மொபைல் போன்கள் மூலம் செயல்படுவதால் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கைத் திறக்குமுன் எந்த வங்கி சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.
இந்தியாவில் செயல்படும் 6 பேமெண்ட்ஸ் வங்கிகள்
- ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி
இந்தியாவில் செயல்படத் தொடங்கிய முதல் பேமெண்ட்ஸ் வங்கி. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் மூலம் இயக்கப்படும் வங்கியான இது வாடிக்கையாளர்களை சென்றடைதல் அடிப்படையில் மற்றவர்களை விட முன்னணியில் இருந்தது. ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கைத் தொடங்க, ஓடிபி, பான் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட மொபைல் மட்டுமே உங்களுக்குத் தேவை. - இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி
இந்திய தபால் துறையின் ஒரு பிரிவான இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியான இது, பலமான நெட்வொர்க்குடன் செயல்படும் பேமெண்ட்ஸ் வங்கியாகும். இந்த வங்கி நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது. பணம் செலுத்துதல் மற்றும் வைப்புத்தொகை போன்ற பொதுவான செயல்பாடுகளுக்காக வங்கியால் தொடங்கப்பட்ட பிரத்யேக செயலி மூலம் நாம் ஒரு கணக்கை திறக்கலாம். ஓடிபி, ஆதார் எண் மற்றும் பான் கார்டு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மட்டுமே உங்களுக்குத் தேவை. - ஃபினோ பேமெண்ட்ஸ் வங்கி
இது தேசிய அளவில் பேமெண்ட்ஸ் வங்கியை இயக்கி வருகிறது. வங்கியில் கணக்கு தொடங்க ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் பான் கார்டு ஆகியவையும் தேவை. அதன் வாடிக்கையாளர்களுக்கு சில தனிப்பட்ட வங்கிச் சேவைகளை வழங்குவதால் இது எளிதானது மற்றும் நம்பகமானது. - ஜியோ பேமென்ட் வங்கி
இது ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியைப் போன்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸால் தொடங்கப்பட்ட இந்த வங்கி 2018ல் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது - பேடிஎம் பேமெண்ட் வங்கி
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு திறக்கும் செயல்முறை எளிதானது. ஆதார் மற்றும் பான் மூலம் மொபைல் மூலம் செய்யலாம். இருப்பினும், முழு KYC க்கு நீங்கள் பேடிஎம் வங்கியின் அருகிலுள்ள KYC மையத்திற்குச் செல்ல வேண்டும். பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது, இது பேடிஎம்மின் வங்கி நிர்ணயித்த அதிகப்படியான தொகையில் பிக்செட் டெபாசிட் வசதியை வழங்குகிறது. - NSDL பேமெண்ட்ஸ் பேங்க்
நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) என்பது ரிசர்வ் வங்கியால் பேமெண்ட்ஸ் வங்கியை நிறுவுவதற்கான கொள்கை அனுமதியைப் பெற்ற 11 விண்ணப்பதாரர்களில் ஒன்றாகும். இந்த பேமெண்ட்ஸ் வங்கியானது பங்குகள், பத்திரங்கள் போன்றவைகளின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்ட நிதி அமைப்பாகும்.