உலகின் மிக கடுமையான தடுப்பூசி விதிகளை கொண்ட சவூதி அரேபியா!
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள வணிகவளாகங்களின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு பாதுகாவலர் நிற்கிறார், பொதுமக்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை அரசு செயலியின் மூலமாக உறுதி செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த செயலி அவர்களின் நகர்வையும் இருப்பிடத்தையும் ஒவ்வொரு மணித்துளியும் கண்காணித்துக்கொண்டிருக்கும்.
அமெரிக்காவிலிருந்து பிரான்சுவரையிலான தடுப்பூசி தேவைகளை எதிர்ப்போரை நெறிப்படுத்தல் தேவை சவுதி அரேபியாவிலும் நிலவத் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று, உலகின் சில கடுமையான நோயெதிர்ப்புத்திரநூட்டல் விதிகளை சவுதி அரசாங்கம் இயற்றியது.
கோவிட்-19ன் அதிவீரிய தொற்று வகையான ‘டெல்டா வேரியன்ட்’ மற்ற நாடுகளை மீண்டும் ‘லாக் டவுனில்’ தள்ள எத்தனிக்கும் நிலையில், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதிதேச அதிகாரிகள், தங்கள் பொருளாதாரத்தை தொடர்ந்து செயல்படவைக்கும் நோக்கில் தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தியை கையில் எடுத்தனர். தடுப்பூசி போடத் தயங்கும் மக்கள் அதிலிருந்து தப்பிக்க வழியில்லாமல் போனால் என்ன நடக்கும் என்பதற்கு, இந்த 35 மில்லியன் மக்கள்தொகைக்கொண்ட தேசம் ஒரு சோதனை கலமானது.
இதுவரை, கொள்கை செயல்படுகிறது; விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, புதிய தொற்று எண்ணிக்கை குறைந்து வருகின்றன, தொற்றுக்கு முந்தைய தரவுகளை ஒப்பிடும்போது பணியிடவருகைகள் வெறும் 6% மட்டுமே குறைவாக உள்ளது, இதுவே லண்டனில் 50%-மாக உள்ளது.
ஆனால் சவுதி அரேபியாவின் அனுபவம், தடுப்பூசி போடப்படாதவர்களை அலுவலகங்களில் இருந்து விலக்கும் கொள்கைகளின் வரம்புகளையும் காட்டுகிறது; பள்ளிகள் மற்றும் பெரும்பாலான பொது இடங்களும் இதில் அடங்கும். ஒரு முழுமையான மன்னராட்சியில்கூட, புதிய விதிகளை செயல்படுத்த எளிமையானாதாக இல்லை. “அரசாங்கம் குடிமக்களைக் கட்டாயப்படுத்துகிறது, இது அடிமைத்தனம்” என்கிறார் 23 வயதான வேலையில்லா சட்ட பட்டதாரி ராவன். ராவன் முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார், அதன் நீண்ட கால பக்க விளைவுகள் பற்றிய கவலையால் இரண்டாவது டோஸை எடுக்க தயங்குகிறார்;
தடுப்பூசி போட மறுப்பது மளிகைக் கடைகளில் இருந்து நுகர்வோரை தடுக்கலாம், 12 வயது மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கலாம், குடிமக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதைத் தடுக்கலாம் மற்றும் தொழிலாளர்கள் ஒவ்வொரு துறையிலும் வேலை இழக்கலாம் எனும் நிலையை சவுதி அரேபியா போன்று வேறு சில நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.