சர்க்கரை-கரும்பு – ஏற்றுமதியில் சர்வதேச விதிகளை மீறியதா இந்தியா?
சர்க்கரை மற்றும் கரும்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு அதிகப்படியான மானியங்களை வழங்கி, சர்வதேச வர்த்தக விதிகளை இந்தியா மீறியதாக உலக வர்த்தக அமைப்பு குழு தீர்ப்பளித்தது.
உலக வர்த்தக அமைப்பின் இணையதளத்தில் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட முடிவின்படி, உள்நாட்டு விவசாய உற்பத்திக்கு நாடுகள் எந்த அளவில் மானியம் வழங்கலாம் என்பதை நிர்வகிக்கும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுடன் இந்தியாவின் கொள்கைகள் முரணாக இருந்தன என்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் கீழ், இந்தியாவின் சர்க்கரை மானியங்கள் உற்பத்தி மதிப்பில் 10 சதவீதம் என்ற குறைந்தபட்ச வரம்பில் வரையறுக்கப்பட்டுள்ளன என்றும் கூறியது. இந்த ஆண்டு சர்க்கரை ஏற்றுமதிக்கு மானியம் வழங்குவதைத் தவிர்ப்பதாக இந்தியா ஏற்கனவே உறுதியளித்துள்ளது என்றும் அது தெரிவித்தது. அறிக்கையை ஏற்றுக்கொண்ட 120 நாட்களுக்குள் இந்தியா தனது சட்டவிரோத மானியங்களை நீக்க வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பு கூறியது.
2019 ஆம் ஆண்டு முதல், இந்திய அரசாங்கம் தனது சர்க்கரை மானியத்தை பெருமளவில் அதிகரித்ததாகவும், சர்க்கரைக்கான குறைந்தபட்ச விலையை மீண்டும் அறிமுகப்படுத்தியதாகவும் , அதனால் உள்நாட்டு தேவையை விட சர்க்கரை உற்பத்தி அதிகரிக்க வழிவகுத்தது என்று உலக வர்த்தக அமைப்பு குற்றம் சாட்டியது.