எஸ்பிஐ – IPO எப்போது?
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா புதன்கிழமை தனது பரஸ்பர நிதி மூலம் அதன் 6 சத பங்குகளை ஐபிஓ வழியாக ஆஃப் லோடிங் செய்யும் சாத்தியக் கூறுகளை ஆராய்வதாகக் கூறியது. எஸ்பிஐ நிதி நிர்வாகத்தில் தற்சமயம் 63 சதவீதப் பங்குகளை எஸ்பிஐ கொண்டுள்ளது, மீதமுள்ள பங்குகளை பாரிஸை தளமாகக் கொண்ட அமுண்டி அசெட் மேனேஜ்மென்ட்டின் துணை நிறுவனமான ‘அமுண்டி இந்தியா ஹோல்டிங்’ மூலம் வைத்திருக்கிறது.
எஸ்பிஐயின் மியூச்சுவல் ஃபண்ட் தற்போது சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்பில் உள்ளது. ஐபிஓ வெளியிடும் நேரம் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐ கார்டுகளின் பட்டியல் மூலம் ₹10,340 கோடிக்கும், எஸ்பிஐ லைஃப் ஐபிஓ மூலம் ₹8400 கோடிக்கும் மேல் எஸ்பிஐ திரட்டியுள்ளது. எஸ்பிஐயின் மியூச்சுவல் ஃபண்ட், அதன் இணையதளத்தின்படி, ₹5 லட்சம் கோடி சொத்துக்களுடன் முன்னிலை வகிக்கின்றது.
மார்ச் 2021 இல் முடிவடைந்த நிதியாண்டில் ஃபண்ட் ஹவுஸ் ₹862.7 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் வணிகமானது, யுடிஐ அசெட் மேனேஜ்மென்ட் கோ. மற்றும் ஹெச்டிஎஃப்சி அசெட் மேனேஜ்மென்ட் கோ ஆகியவற்றுடன் இணைந்த மூன்றாவது பட்டியலில் இருக்கும். எஸ்பிஐயின் பங்குகள் புதன்கிழமை தொடக்கத்தில் பிஎஸ்சியில் 488 ரூபாய்க்கு பிளாட் வர்த்தகம் செய்யப்பட்டது.