மூன்று பிட்னெஸ் நிறுவனங்களை வாங்கிய “கல்ட்-பிட்” நிறுவனம்!
உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த சேவைகளை வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான கல்ட் பிட், ஹோம் கார்டியோ எக்கியூப்மென்ட் பிராண்டுகளான ஆர்.பி.எம் பிட்னெஸ், பிட்கிட் மற்றும் ஒன்பிட்பிளஸ் ஆகியவற்றை வாங்கி இருப்பதாக நேற்று அறிவித்திருக்கிறது. இந்த பிராண்டுகள் ஷோரா ரீடெய்லில் மோஹித் மாத்தூர் மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்டு சந்தையில் இயங்கியவை, இப்போது இந்த நிறுவனங்கள் அனைத்தும் வணிகத்தை மேலும் விரிவுபடுத்த கல்ட் பிட் உடன் இணைகின்றன. இதன் ஒருங்கிணைந்த மதிப்பானது சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள்”.
கல்ட்பிட் புதிய 19,000 பின்கோடுகளில் இயங்கக்கூடிய புதிய நெட்வொர்க்கை அமைத்து வருகிறது மட்டுமில்லாமல் சைக்கிள்களை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை அமைக்க தயாராகி வருகிறது, முன்னதாக பெங்களூருவை மையமாகக் கொண்ட டிரெட் பிட்னெஸ் நிறுவனத்தை வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. கல்ட் பிட் 150 மில்லியன் டாலர் எஃப் சீரிஸ் நிதி திரட்டை முடித்து யுனிகார்ன் கிளப்பில் நுழைந்துள்ளது.
“இந்த கையகப்படுத்தல் மூலம் கூடுதலாக ஸ்மார்ட் உடற்பயிற்சி உபகரணங்கள் எங்கள் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை அதிகரிக்கிறது. ரூ.5,000-7,000 க்கு எளிய ஏர் பைக்குகள் முதல் பிரீமியம் கல்ட் பைக் ரூ.50,000 வரை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். உடற்பயிற்சி சந்தையானது உலகம் முழுவதும் விரிவடைந்து வருகிறது, மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த புதுமையான விஷயங்களை அறிமுகப்படுத்த நாங்கள் முயற்சிசெய்கிறோம்” என்று கல்ட் பிட் நிறுவனத்தின் டிஜிட்டல் ஹெல்த் பிரிவு தலைவர் ஷமீக் சர்மா கூறினார்.