எதிர்பார்ப்பைத் தூண்டும் விப்ரோ மற்றும் அக்செஞ்சர் நிறுவன காலாண்டு முடிவுகள்? கிடைக்குமா டிவிடெண்ட்?
ஐடி துறையில் முன்னணி நிறுவனமான அக்சென்சர் இன்னும் சில நாட்களில் டிசம்பருடன் முடிந்த காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது, எனவே சந்தையில் அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். விப்ரோவின் நிர்வாகக் குழு கூட்டமானது ஜனவரி 11,12ல் நடக்கிறது. அப்போது அது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது. அத்துடன் நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால டிவிடெண்டையும் அறிவிக்க உள்ளது.
பங்குச் சந்தையில் தனது சேவையை டிசம்பர் 16ம் தேதியில் இருந்து ஜனவரி 14ம் தேதிவரை நிறுத்தி வைப்பதாக செபியிடம் தெரிவித்துள்ளது, விப்ரோ , இந்த ஆண்டு நிகர லாபமாக 2,931 கோடி ரூபாயை செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் பெற்றுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் 0.45 சதவீதம் உயர்ந்து 697.65 ரூபாய்க்கு முடிந்தது. ஒரு மாத காலமாக அதன் பங்குகள் நிச்சயமற்ற நிலையிலேயே இருந்தன,
இதேநேரத்தில் ஐடி துறையின் மற்றொரு நிறவனமான ஹெச்சிஎல் தனது மூன்றாம் காலாண்டு முடிவுகளை ஜனவரி 12ம் தேதி அறிவிக்க இருக்கிறது. அத்துடன் நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூடி நடப்பு நிதியாண்டின் டிவிடெண்டை அறிவிக்கவும் உள்ளது. ஐடி துறையில் மற்றொரு நிறுவனமான அக்சென்ஷர் தனது மொத்த ஆண்டு வருமானம் 19 சதவீதத்தில் இருந்து 22 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கிறது. இது முந்தைய கணிப்பின்படி 12 சதவீதத்தில் 15 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்த்தது.