2021 இல் யூனிகார்ன் எண்ணிக்கையில் மூன்றாம் இடம் பிடித்த இந்தியா !
இந்திய நிறுவனங்களுக்கு சென்ற ஆண்டு நல்ல துவக்கமாக அமைந்தது. ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக திரட்டிய நிறுவனங்களை யூனிகார்ன் என்று அழைப்பார்கள். கோவிட் சூழலிலும் 33 இந்திய நிறுவனங்கள் யூனிகார்னுக்குள் நுழைந்தன. இத்துடன் சேர்த்து மொத்தம் 54 நிறுவனங்கள் யூனிகார்னில் இருக்கின்றன என்றும் உலகளாவிய அளவில் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இப்போது இந்தியா உள்ளதாக ஹாருனின் உலகளாவிய யூனிகார்ன் இண்டெக்ஸ் தெரிவிக்கின்றது.
இந்தியாவின் ஸ்டார்ட் அப் ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ் 21 பில்லியன் டாலர் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து மொபைல் ஆட்டெக் (adtech) நிறுவனமான இன்மொபி 12 பில்லியன் டாலரையும் , ஹோட்டல் துறையில் கொடி கட்டிப் பறக்கும் ஓயோ 9.5 பில்லியன் டாலரையும் பெற்றுள்ளது. இந்தியாவிற்கு வெளியில் வசிக்கும் இந்தியர்களின் 65 நிறுவனங்கள் ஒரு பில்லியன் டாலர்களை பெற்றுள்ளது. 2021ஆம் ஆண்டு, 586லிருந்து கிட்டத்தட்ட இரண்டு மடங்காக 1,058 யூனிகார்ன்களாக மாறியதற்கு முக்கிய சாட்சியாக உள்ளது. இதில் அமெரிக்க நிறுவனங்கள் 487 (254)ம், சீனாவில் இருந்து 301 (74) நிறுவனங்களும் கிட்டதட்ட 74 சதவீதம் உலகளவில் யூனிகார்ன்களாக உள்ளன,மீதியுள்ள இடங்களில் இத்தாலி, ரஷ்யா, சௌதி அரேபியா மற்றும் போலந்து போன்ற வலுவாக பொருளாதாரம் உள்ள நாடுகளில் இருந்து ஒன்று கூட யூனிகார்னில் இடம் பிடிக்கவில்லை.
முதன்முறையாக மெக்சிகோ, ஹாலந்து, பஹாமாஸ், பெல்ஜியம்.சிலி, செக் குடியரசு,டென்மார்க், நார்வே, செனகல்,தாய்லாந்து, துருக்கி, யுஏஇ, மற்றும் வியட்நாம் போன்ற 13 நாடுகளில் இருந்து நிறுவனங்கள் யூனிகார்னில் இடம் பிடித்துள்ளன. உலகின் முன்னணி நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மாவின் ஆன்ட் குரூப் தனது பட்டத்தை பைட் டான்சிடம் பறிகொடுத்தது. பைட் டான்சின் மொத்த சொத்து மதிப்பு 350 பில்லியன் டாலர் ஆகும். ஆன்ட் குரூப் 150 பில்லியன் டாலர்களை கொண்டிருக்கிறது. எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 100 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதன் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர் ஆகும்,