வெளிநாடு வாழ் (NRI) இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேறுமா?
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. NRI களுக்கு தனிநபர் நிறுவனங்களை (OPCs) அமைப்பதற்கான அனுமதியானது அவர்கள் இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்கியது. மலிவு விலை வீடுகளுக்கான வரிச் சலுகைகளும் நீட்டிக்கப்பட்டது. பல நாடுகளால் விதிக்கப்பட்ட முழு அடைப்பு மற்றும் விமானப் போக்குவரத்து தடைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு விதிகளையும் அரசாங்கம் தளர்த்தியது, இது NRI கள் திட்டமிட்டதை விட நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.
அப்படி இருந்தும் அவர்களின் பல நீண்ட காலக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஜனவரி 31 அன்று தாக்கலாகும் பட்ஜெட்டில் NRIகள் எதிர்பார்க்கும் சில மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அவை குறித்து ஒரு பார்வை :
வரி விலக்கு விதிகள்:
50 லட்சத்துக்கும் குறைவான சொத்தை விற்கும் போது, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சொத்து வைத்திருந்தால், மூலதன ஆதாயத்தில் 20% TDS செலுத்த வேண்டும். தனிநபரின் வருமான வரி அடுக்கின்படி மூலதன ஆதாயங்கள் குறுகிய காலமாக இருந்தால், (இரண்டு வருடங்களுக்கும் குறைவான சொத்து) 50 லட்சத்திற்கு மேல் சொத்து மதிப்பு இருக்கும் பட்சத்தில் LTCG வரியில் கூடுதல் கட்டணம் உள்ளது. இது TDS விகிதத்தை அதிகரிக்கிறது. சொத்தின் விலையுடன் கூடுதல் கட்டணம் அதிகரிக்கிறது. 2 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துகளுக்கான மூலதன ஆதாயத்தில் 28.5% வரை TDS ஆக இருக்கலாம்
இதேபோல், பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு TDS இல்லை என்றாலும், NRI களுக்குப் பொருந்தக்கூடிய வரி விகிதங்களில் டிடிஎஸ் செலுத்த வேண்டும். பங்கு சார்ந்த முதலீடுகளின் குறுகிய கால மூலதன ஆதாயங்கள் 15% TDS மற்றும் பொருந்தக்கூடிய செஸ் ஆகியவற்றிற்கு உட்பட்டது. ஈக்விட்டி அல்லாத முதலீடுகள் (கடன் நிதிகள் போன்றவை), பத்திரங்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் 30% TDSக்கு உட்பட்டவை. வாடகை வருமானமும் 30% TDSக்கு உட்பட்டது. NRIகள் தங்களுக்கும் குடியுரிமை வரி செலுத்துவோருக்கும் TDS விதிகளில் சமத்துவம் இருப்பதாக நம்புகிறார்கள்.
அடிப்படை வரி விலக்கு வரம்பு :
NRI களுக்கு மற்றொரு முக்கிய வேதனை என்னவென்றால், அடிப்படை வரி விலக்கு வரம்பான ரூ.2.5 லட்சத்திற்கு எதிராக அவர்களால் மூலதன ஆதாயங்களை சரி செய்ய முடியாது. ஒரு குடியுரிமை வரி செலுத்துவோர் ஈட்டிய மூலதன ஆதாயங்கள் (குறுகிய கால மற்றும் நீண்ட கால) அடிப்படை வரி விலக்கு வரம்புக்குக் கீழே இருந்தால், வரிப் பொறுப்பு ஏதுமில்லை. இருப்பினும், NRIகள் தங்களின் வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தாலும் மூலதன ஆதாயத்திற்கு மொத்த வரி செலுத்த வேண்டும். பல NRIகள் இந்த ஒழுங்கின்மையை பட்ஜெட்டில் சரி செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
முதலீட்டுக் கட்டுப்பாடுகள்:
மற்ற வரி செலுத்துவோரைப் போலவே, NRIகளும் பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சமும், பிரிவு 80CCD (1b) இன் கீழ் NPS இல் முதலீடு செய்ய ரூ. 50,000 மும் விலக்கு பெற தகுதியுடையவர்கள் இருப்பினும், அவர்கள் எங்கு முதலீடு செய்யலாம் என்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யவோ, PPF கணக்கை திறக்கவோ அல்லது NSC மற்றும் தபால் அலுவலக டெபாசிட்களை வாங்கவோ முடியாது. பட்ஜெட்டில் இந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். எவ்வாறாயினும், அத்தகைய முதலீடுகளிலிருந்து ஈட்டப்படும் வருமானம் சாதாரண வரிக்கு உட்பட்டது. RBIயின் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து ஒரு நபருக்கு ஆண்டுக்கு $2,50,000 வரை பணம் அனுப்பலாம்.
சமமான வரி விலக்குகள்:
வெளிநாடு வாழ் இந்தியர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பங்கள் சொந்த ஊரில் வசிக்கிறார்கள். இருப்பினும், மாற்றுத்திறனாளிகளைச் சார்ந்தவர்களின் மருத்துவ சிகிச்சை (Sec 80DD), குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் சிகிச்சை (Sec 80DDB) மற்றும் சுயமாகவோ அல்லது சார்ந்திருப்பவர்களின் இயலாமை (Sec 80U) உள்ளிட்ட சில வரி விலக்குகளுக்கு NRIகள் தகுதியற்றவர்கள். பல NRI கள் நோய்வாய்ப்பட்ட மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்களைக் கவனித்து வருவதால், அவர்களுக்கும் இந்தச் சலுகைகள் நீட்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.