டாடா குழுமத்திடம் ஏர்இந்தியாவை ஒப்படைக்கும் பணிகள் ஜன.27 முடிவடையும்..!!
ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் பணிகள் ஜனவரி 27-ம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலம் சமர்ப்பிப்பு:
அண்மையில் டாடா குரூப் ஹோல்டிங் நிறுவனம், டாடா சன்ஸ் பிரைவேட். லிமிடெட், அதன் முழு உரிமையுடைய யூனிட் டலேஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் ஏர் இந்தியாவின் நிறுவன மதிப்பாக ₹12,906 கோடிக்கு எதிராக ₹18,000 கோடி வெற்றி பெறும் ஏலத்தை சமர்ப்பித்தது.
ஏர்`இந்தியா நிதி இயக்குநர் தகவல்:
ஏர்இந்தியாவின் ஊழியர்களுக்கு, அந்நிறுவனத்தின் நிதி இயக்குநர் வினோத் ஹெஜ்மாடி, அனுப்பியுள்ள செய்தியில், ஜனவரி 20 -ல் உள்ள இறுதி இருப்புநிலை ஜனவரி 24 ஆம் தேதி வழங்கப்பட வேண்டும். இதனால் அதை டாடாக்கள் மதிப்பாய்வு செய்ய முடியும் மற்றும் அதில் ஏதேனும் மாற்றங்களை புதன்கிழமை செயல்படுத்த முடியும்” என்று ஹெஜ்மாடி அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளார்.
“முதலீடு நடவடிக்கைக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதில் நாங்கள் இதுவரை சிறப்பான பணியைச் செய்துள்ளோம். அடுத்த மூன்று நாட்கள் எங்கள் துறைக்கு பரபரப்பாக இருக்கும், நாங்கள் விலகுவதற்கு முன் இந்த மூன்று நான்கு நாட்களில் உங்களால் முடிந்ததைச் செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“ஏர் இந்தியாவை டாடா குழுமத்திற்கு மாற்றுவது முன்னதாக ஜனவரி 23-ஆம் தேதி முடிவடையும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இது சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு, மாத இறுதியில் முடிவடையும்” என்று அவர் மேலும் கூறினார்.
வெற்றி பெற்ற ஏலதாரர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் அக்டோபர் 11 அன்று டாடா குழுமத்துக்கு ஒரு கடிதத்தை (LoI) வழங்கியது.
பரிவர்த்தனை முடிந்ததும், டாடா குழுமத்திற்கு ஏர் இந்தியா மற்றும் அதன் குறைந்த விலை யூனிட் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா SATS இன் 50% பங்குகள் ஆகியவற்றின் முழுக் கட்டுப்பாடும் வழங்கப்படும்.