ஏர்டெல்லுடன் சேரும் கூகுள் – ரூ.7,500 கோடி முதலீடு..!!
உலகின் புகழ்பெற்ற தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் ஏர்டெல்லில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.7,500 கோடியை முதலீடு செய்துள்ளது.
கூகுள் நிறுவனம் திட்டம்:
கூகுள் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம், தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சேவைகளை அளித்து வர்த்தகத்தை பெருக்க முடியும் என்று திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறது. இதற்காக, Smart Phone-களுக்கான சிறப்பு Andriod தொழில் நுட்பத்தையும் கூகுள் உருவாக்கியுள்ளது.
ரூ.7,500 கோடி முதலீடு செய்த கூகுள்:
இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் ஏர்டெல்லுடன் கை கோர்த்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவெடுத்து, அதற்காக 7.500 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இது ஏர்டெல்லின் 1.28% பங்குகளை வாங்குவதற்கு 700 மில்லியன் டாலர்களும், அத்துடன் வர்த்தக சந்தைகளை செயல்படுத்த 300 மில்லியன் டாலர் வரை ஒதுக்கப்படுகிறது. இதில் ஒரு பங்குடைய விலை ரூ.734 என்ற அடிப்படையில், 5.200 கோடி ரூபாயை, ஏர்டெல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு, 5ஜி இணையசேவை மற்றும் வருங்காலத்தில் Network ஆகியவற்றை விரிவுப்படுத்துவதுதல் ஆகியவற்றுக்காக நேரடியாக முதலீடு செய்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக பாரதி ஏர்டெல் பங்குகளின் விலை அதிகரித்துள்ளது.