L&Tயின் நிகர லாபம் – 3-ம் காலாண்டில் 17% சரிவு..!!
லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம், 2021 டிசம்பர் 30-ம் தேதியுடன் முடிவுற்ற காலாண்டில், 17% குறைந்து, மூ.2.055-ஆக பதிவு செய்துள்ளது. அதிக மூலப்பொருள் மற்றும் எரிபொருள் விலைகள் பாதித்ததால், ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 17% சரிந்து ரூ.2,055 கோடியாக உள்ளது என்று L&T தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.2,467 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
L&T அறிக்கை தாக்கல்:
L&T நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் ஒருங்கிணைந்த வருவாய் 11% அதிகரித்து ரூ.39,563 கோடியாக இருந்தது. இது Q3FY21 இல் ரூ.35,596 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த ஆர்டர் டிசம்பர் 31, 2021 நிலவரப்படி ரூ. 3.4 டிரில்லியனாக இருந்தது. சர்வதேச ஆர்டர்கள் 24% பங்கைக் கொண்டுள்ளன. இது பல ஆண்டு வருவாய் தெரிவுநிலையை அளிக்கிறது என்று நிறுவனம் செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
L&T தகவல்:
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஹைட்ரோகார்பன் ஆஃப்ஷோர், மெட்ரோக்கள், கிராமப்புற நீர் வழங்கல், கனிமங்கள் மற்றும் உலோகம், பொது இடம், சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பவர் டிரான்ஸ்மிஷன் மற்றும் விநியோகம் ஆகிய பல்வேறு வணிகங்களில் ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன என்று L&T தெரிவித்துள்ளது. காலாண்டில் மொத்த ஆர்டர் வரவில் ரூ.20,521 கோடி மதிப்புள்ள ஹைட்ரோகார்பன் ஆஃப்ஷோரில் சர்வதேச ஆர்டர்களைப் பெற்றது. உள்கட்டமைப்புப் பிரிவு ரூ.25,330 கோடி ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 44% குறைந்துள்ளது. கனரக பொறியியல் பிரிவு 29% வளர்ச்சியைப் பதிவுசெய்து ரூ.1,288 கோடி ஆர்டர் வரவைப் பதிவு செய்துள்ளது.