நிதிமோசடி புகார் – BharatPe நிர்வாக இயக்குநர் ராஜினாமா..!?
நிதிமோசடி புகார் காரணமாக BharatPe நிறுவனத்தின் இணைநிறுவனரும், நிர்வாக இயக்குநருமான அஷ்னீர் குரோவரை ராஜினாமா செய்யும்படி கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
BharatPe நிறுவன ஊழியர்கள் ராஜினாமா:
BharatPe நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஷ்னீர் குரோவரின் மனைவியும், அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டுத் தலைவருமான மாதுரி ஜெயின் உட்பட 15 ஊழியர்களுடைய, ராஜினாமா கோரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மாதுரி ஜெயின், BharatPe நிறுவனத்தின் ஆரம்ப நாளிலிருந்து, கொள்முதல், நிதி மற்றும் மனிதவளம் உள்ளிட்டவைகளுக்கு தலைமை வகித்து வந்தார். இந்நிலையில், நிதி மோசடி குற்றச்சாட்டு காரணமாக, நிறுவனத்தின் ஊழியர்கள் 15 பேரை ராஜினாமா செய்ய கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மோசடி புகார் மற்றும் மாதுரி ஜெயின் உட்பட 15 பேரை வெளியேற்றுவது தொடர்பாக BharatPe நிறுவனம் இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
நைகாவின் ஆரம்ப பங்கு விற்பனைக்கான நிதியுதவியைப் பெறத் தவறியதற்காக, கோட்டக் வெல்த் மேனேஜ்மெண்ட்டின் பணியாளரை க்ரோவர் அச்சுறுத்தும் ஆடியோ தோன்றியதிலிருந்து, இந்த பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில் க்ரோவர் செய்த ரியல் எஸ்டேட் கொள்முதல் குறித்து தற்போது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சினை தொடர்பான முடிவுகள் வெளிவர இரண்டு மாதகாலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.