2022-23-ம் பட்ஜெட் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்..!!
2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். Make In India திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட Tablet-ல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்:
ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியா, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரி செய்து வேகமாக வளர்ந்து வருகிறது.
நிதியமைச்சரின் அறிவிப்புகள்:
4 அம்சங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நிநிநிலை அறிக்கையில், இளைஞர்கள் தொழில் தொடங்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
LIC பொதுப்பங்குள் விரைவில் வெளியிடப்படும்.
தற்சார்பு இந்தியா திட்டம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை:
போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். வந்தே பாரத் திட்டத்தின்கீழ், அடுத்த 3 ஆண்டுகளில் 400 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள்:
ரசாயனம் இல்லாத இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணெய் வித்துக்கள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
கோதாவரி-காவிரி-பெண்ணாறு உள்ளிட்ட 5 நதிகளை இணைக்க திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், 18 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு 48 ஆயிரம் கோடி ரூபாயும், நீர்ப்பாசன திட்டங்களுக்காக 44 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில மொழிகளில் பாடம் நடத்துவதற்கு கூடுதலாக 200 கல்வி சேனல்கள் தொடங்கப்படும். சிறுதொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.7 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.