Pension பணத்தை எடுக்கணுமா.. இதோ புது Rules..!!
தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme) இதிலிருந்து பணத்தை எடுப்பதற்கு தற்போது புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
2004-ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டம் பின்னர், 2009-ம் ஆண்டு தனியார் நிறுவன ஊழியர்களுக்காகவும் விரிவுப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் இருந்து நாம் பணத்தை எடுக்க ஒருசில நிபந்தனைகள் உள்ளன. ஒருநபர் ஓய்வு பெறும்போது, முதலீட்டாளர் இறந்து விட்டால், அல்லது முதிர்வுக்கு முன்பாக பணம் தேவைப்பட்டால் இந்த காரணங்களுக்காக மட்டுமே National Pension Scheme-லிருந்து பணத்தை எடுக்க முடியும்.
தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சில சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த விதியின்படி, 10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் பணத்தை எடுக்க முடியும். இப்போது 3 ஆண்டுகளில் பணத்தை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்களிப்பில், 25% மட்டுமே எடுக்க முடியும்.(டெபாசியட் செய்யும் தொகையிலா் பெறப்படும் கூடுதலான வட்டி கணக்கில் எடுத்து கொள்ளப்படுவதில்லை).
சிகிச்சை, திருமணம் மற்றும் குழந்தைகளுக்கான உயர்கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக சிறிதளவு பணத்தை எடுக்கலாம்.
பகுதி அளவு பணத்தை 3 முறை மட்டுமே எடுக்க முடியும். அப்படி எடுப்பதற்கு இடையே 5 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80c-யின் கீழ் 1.50 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.