பணம் இல்லைனா அபராதம் அதிகம் – ICICI அறிவிப்பு..!!
ICICI வங்கி Credit Card-களுக்கான கட்டணத்தை மாற்றியுள்ளதுடன், பணமின்றி திரும்பும் காசோலைக்கான அபராதத் தொகையையும் அதிகரித்துள்ளது.
ICICI வங்கி அறிவிப்பு:
ICICI வங்கி Credit Card வைத்திருப்பவர்கள்(Emerald Card தவிர) ரொக்கப் பணத்தை எடுத்தால், குறைந்த அளவாக 500 ரூபாய் கட்டணம் அல்லது 2.5 சதவீதம் செலுத்த வேண்டும்.
இதேபோல், கிரெடிட் கார்டுக்கான பில் தொகையை குறிப்பிட்ட தேதிக்கு பிறகு செலுத்தினால் அதிகபட்சம் 1.200 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும். நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ.100-க்கு கீழே இருந்தால் எந்த அபராதமும் விதிக்கப்படாது. 50.000 ரூபாய் அல்லது அதற்கு மேல் நிலுவை கட்டணம் இருந்தல் 1.200 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று ICICI வங்கி அறிவித்துள்ளது.
பணமில்லாத காசோலைக்கு அபராதம்:
வங்கியில் பணமின்றி காசோலை திரும்பி வந்தால், அதற்கு ரூ.550 அபராதம் அல்லது காசோலைக்கான தொகையில் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் எனவும் ICICI வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
சந்தையிலுள்ள பிற வங்கிகளான HDFC Bank, SBI மற்றும் AXIX Bank ஆகியவை ஏற்கனவே, முறையே 1.300, 1.200 மற்றும் 1.000 ரூபாயை அபராதமாக வசூலித்து வருகின்றன.