Tata-வின் அடுத்த அதிரடி – ஒருமுறை சார்ஜ் செய்தாலே பறக்கும்..!!
Ratan Tata அறிமுகம் செய்யவுள்ள Electric Car ஒருமுறை Charge செய்தாலே 160 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் என்று கூறப்படுகிறது.
Electric Car விற்பனையில் முன்னணி:
இந்தியாவில் அதிக Electric Carகளை விற்பனை செய்து வரும் நிறுவனமாக Tata Motors நிறுவனம் உள்ளது. ஏற்கனவே Tata Motors-ன் Nexon Electric Car, Tigor Electric Car ஆகியவை சந்தையில் உள்ளன. தற்போது Tata Motors நிறுவனம் Nano அடிப்படையில் எலக்ட்ரிக் காரை சந்தைப்படுத்தியுள்ளது. Electra EV நிறுவனம் Tata Nano காரை தயாரித்து. அதனை ரத்தன் டாடாவுக்கு அளித்துள்ளது.
Tata Nano Electric:
இந்த Tata Nano Electric காரில், சூப்பர் பாலிமர் லித்தியம், அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. பேட்டரியை ஒருமுறை முழுமையாக Charge செய்தாலே 160 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணம் செய்ய முடியும். அதாவது பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர் என்ற வேகத்தை 10 விநாடிகளுக்குள் கடந்து விடலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியர்கள் அனைவரும் வாங்கும்படியான மலிவு விலையில், Tata Motors நிறுவனம் முன்னதாக சந்தைப்படுத்திய Tata Nano Car சில காரணங்களால் இந்திய சந்தையில் தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Tata Nano Electric கார் தற்கால சூழலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.