வங்கிகளுக்கு கடன் பாக்கி – டாடா டெலிசர்வீசுக்கு டாடா சன்ஸ் உதவி..!!
நஷ்டத்தில் உள்ள Tata Tele Services Limited-க்கு கூடுதலாக ரூ.2,420 கோடி ரூபாயை தரவுள்ளதாக டாடா ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ்(Tata Sons)அறிவித்துள்ளது. இந்த பணம் டாடா டெலிசர்வீசஸ் வாங்கிய கடனை திருப்பி செலுத்த உதவும் என்று தெரிவித்துள்ளது.
TTSL வங்கிகளுக்கு கடன் பாக்கி:
வங்கி ஆதாரங்களின்படி, டாடா டெலிசர்வீசஸ் வங்கிகளுக்கு பிப்ரவரி இறுதிக்குள் ரூ.1,530 கோடியும், மார்ச் 11-க்குள் ரூ.890 கோடியும் செலுத்த வேண்டும்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அறிவித்த ரூ.18,000 கோடி பைபேக்கில் பங்கேற்பதன் மூலம் டாடா சன்ஸ் பணத்தை திரட்டும். டாடா சன்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனமான டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன், தங்களின் டிசிஎஸ் பங்குகளை ஒரு பங்குக்கு ரூ.4,500-க்கு விற்பதன் மூலம் சுமார் ரூ.12,993 கோடியை திரட்டும்.
நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதத்தில் டாடா டெலிசர்வீசஸ் ரூ.1,400 கோடி நஷ்டத்தை ஈட்டியது. அதன் நிகர மதிப்பு ரூ.19,182 கோடியாக உள்ளது, டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,250 கோடியாக இருந்தது.
Tata Tele Services குழுவானது செல்லுலார் தொலைபேசி வணிகத்தை பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு விற்ற போதிலும், கடன்கள் மற்றும் இந்திய அரசுக்கு ரூ.60,000 கோடியை திருப்பிச் செலுத்தியுள்ளது.
CARE மதிப்பீடுகளின்படி, TTSL-இன் மூலதனக் கட்டமைப்பானது 2021-் ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, இரண்டு நிறுவனங்களுக்கும் (TTSL மற்றும் TTML) மொத்த வங்கிக் கடனுடன் 10,800 கோடி ரூபாயாக உயர்ந்தது.