55.000 பேருக்கு வேலை தருது Infosys – இப்பவே ரெடியாகுங்க..!!
மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Infosys 2022-23-ம் நிதியாண்டில் 55,000 புதிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரவுள்ளதாக தெரிவித்துள்ளது.
Infosys அறிவிப்பு:
பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சலில் பரேக் கூறுகையில், தொழில்நுட்பத் துறையில் பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்து கொண்டுள்ளன. ஆனால் குறுகிய காலத்தில் புதிய திறன்களைக் கற்க வேண்டிய ஒரு தொழிலாக இது இருக்கும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில், 55 ஆயிரம் புதிய பட்டதாரிகளையும், 2023-ம் ஆண்டில் கூடுதல் புதியவர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என அவர் கூறினார்.
20222-ல் Infosys நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 20 சதவிகித உயர்வை இலக்காகக் கொண்டுள்ளது. இது புதியவர்கள் நிறுவனத்தில் சேர்வதற்கும், வளர்வதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தும். நிறுவனம் திறமையில் அதிக கவனம் செலுத்துவதால், புதியவர்கள் பணியமர்த்தப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு 6 முதல் 12 வாரங்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் சலில் பரேக் குறிப்பிட்டார்.
இளம் கல்லூரி மாணவர்களுக்கு, பெரும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று கூறிய பரேக், குறைந்த இடைவெளியில் புதிய திறன்களை உள்வாங்கத் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.