Bank வேலைக்கு Wait பண்றீங்களா? – SBI-ல உங்களுக்காக வேலை Wait பண்ணுதுங்க..!!
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 48 பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
SBI-யில்உதவி மேலாளர்(Network Security Specialist) பணிக்கு 15 பணியாளர்களும், உதவி மேலாளர்(Routing&Switching) பணிக்கு 33 பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
தகுதியுள்ளவர்கள் வரும் 25-ம் தேதிக்குள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://bank.sbi/careers இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் 20-ம் தேதி ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்றும், இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள், https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers ஆகிய இணையதளங்களை தொடர்ந்து பார்வையிடுமாறும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.