அம்பேல் ஆன அனில் அம்பானி – Reliance Capital விற்பனைக்கு..!!
அனில் அம்பானியின் Reliance Capital நிறுவனத்தை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
அனில் அம்பானியின் Reliance Home Finance நிறுவனத்துக்கு பங்குச்சந்தை மற்றும் பாண்டு வெளியீடு உட்பட செக்யூரிட்டிஸ் சந்தைகளில் பங்கேற்க செபி தடை விதித்துள்ளது. மேலும், அனில் அம்பானி, அமித் பாப்னா மற்றும் ரவீந்திர சுதாகர் மற்றும் பிங்கேஷ் ஆர்.ஷா ஆகிய 4 பேருக்கும் பங்குச் சந்தையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மூன்றாவது பெரிய Non Banking Financial Company(NBFC)-ஆன அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிட்டலுக்கு(RCL) எதிராக சமீபத்தில் திவால் நடவடிக்கைகளை எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, கடனில் சிக்கியுள்ள ரிலையன்ஸ் கேப்பிட்டலை விற்பனை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செப்டம்பரில், நடந்த ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், அதன் ஒருங்கிணைந்த கடன் ரூ.40,000 கோடி என்று பங்குதாரர்களுக்கு ரிலையன்ஸ் கேபிடல் தெரிவித்திருந்தது. பணம் செலுத்துவதில் இருக்கும் இயல்புநிலை, நிறுவனத்தின் செயல்பாடுகளில் காணப்பட்ட கடும் சிக்கல்கள் காரணமாக, கடந்த ஆண்டு நவம்பரில் Reliance Capital நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவை கலைத்த ரிசர்வ் வங்கி, ஒய்.நாகேஸ்வர ராவை ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் நிர்வாகியாக நியமித்தது. அதனை தொடர்ந்து Reliance Capital நிறுவனத்துக்கு எதிராக Corporate Insolvency Resolution Process(CIRP)யை தொடங்க, தேசிய சட்ட தீர்ப்பாயத்தின் மும்பை பெஞ்சில் ரிசர்வ் வங்கி மேல்முறையீடு செய்தது.