GDP 9.5% உயரும் – Moody’s Investors Service தகவல்..!!
நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 9.5 சதவீத வளர்ச்சியை அடையும் என Moody’s Investors Serviceதகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரிப்பு, அவற்றின் விநியோக பாதிப்புகள் இருந்தாலும், நடப்பு 2022-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிதியாண்டில் இந்த வளர்ச்சி 8.4 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 2022 காலண்டர் ஆண்டு வளர்ச்சிக் கணிப்பை 7 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாக உயர்த்தியுள்ளோம், மேலும் 2023ல் 5.5 சதவீத வளர்ச்சிக்கான எங்கள் முன்னறிவிப்பைப் பராமரித்துள்ளோம். இது 2022-23 நிதியாண்டுகளில் 8.4 சதவீதமாகவும் 6.5 சதவீதமாகவும் இருக்கும்” என்று மூடிஸ் இண்வெஸ்டார்ஸ் சர்வீஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அதன் பிப்ரவரி கூட்டத்தில் வட்டி விகிதங்களை மாற்றாமல் விட்டுவிட்டதால், பணவியல் கொள்கை ஆதரவாகவே உள்ளது. ஆனால் நிதி ஆதரவு குறைவது, இறுக்கமான பணவியல் கொள்கை மற்றும் தேங்கி நிற்கும் தேவை குறைவது ஆகியவை பெரும்பாலான நாடுகளில் வளர்ச்சி வேகத்தை பாதிக்கும் என்று அறிக்கை கூறுகிறது.