Big Bazaar Retails மூடல்.. கைப்பற்றும் Reliance..!!
Big Bazaar கடைகள் அனைத்தும் Reliance கட்டுப்பாட்டுக்குள் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Future Retail குழுமம் இந்தியா முழுவதிலும் பிக் பஜார் என்ற பெயரில் கடைகளை நடத்தி வருகின்றன. இவைகளில் பெரும்பாலானவை பிப்ரவரி 25-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த பிரிவின் ஆன்லைன் பிரிவுகளும் செயல்படாமல் உள்ளன.
இந்த நிலையில், Future Retail நிறுவனத்தின் பெரும்பாலான கடைகள் ரிலையன்ஸ் கட்டுப்பாட்டுக்குள் வர இருப்பதாகவும், அவை Reliance Retail என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திறக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 30,000 ஃப்யூச்சர் ரீடெய்ல் மற்றும் ஃபியூச்சர் லைஃப்ஸ்டைல் ஊழியர்களை தனது நிறுவனத்திற்கு மாற்றும் பணியில் ரிலையன்ஸ் ஈடுபட்டுள்ளது.
ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்துக்கு துணை குத்தகைக்கு விடப்பட்ட கடைகளை ஆர்ஐஎல் கைப்பற்றியுள்ளது, மேலும் இந்த கடைகள் அனைத்தும் நஷ்டத்தில் உள்ளன. மீதமுள்ள கடைகள் ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தால் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.
ஃபியூச்சர் குழுமம் – அமேசான் இடையேயான சட்டப் போராட்டத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் நான்கு வழக்குகளை விசாரித்து வருகிறது. தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) ஃபியூச்சர் கூப்பன்களுடனான 2019 ஒப்பந்தத்தை ரத்து செய்த இந்தியாவின் போட்டி ஆணையத்தின் (CCI) உத்தரவை எதிர்த்து அமெரிக்க நிறுவனத்தின் வழக்கையும் விசாரித்து வருகிறது.
சனிக்கிழமையன்று பங்குச் சந்தையில் தாக்கல் செய்த மனுவில், ஃபியூச்சர் ரீடெய்ல், கணிசமான எண்ணிக்கையிலான கடைகளுக்கு பெரும் நிலுவைத் தொகைகள் இருப்பதால், அது போன்ற ஸ்டோர் வளாகங்களுக்கு இனி அணுக முடியாது என்று அறிவித்தது.
கடந்த நான்கு காலாண்டுகளில் ரூ.4,445 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக பியூச்சர் ரீடெய்ல் தெரிவித்துள்ளது. பிக் பஜார், Fbb மற்றும் சென்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளில் கடனில் சிக்கியுள்ள சில்லறை விற்பனைச் சங்கிலி 1,700 கடைகளைக் கொண்டுள்ளது.
ஃபியூச்சர் குழுமம் அதன் சில்லறை, தளவாடங்கள் மற்றும் கிடங்கு வணிகங்களை ரிலையன்ஸ் குழுமத்திற்கு 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ. 25,000 கோடிக்கு விற்க முடிவு செய்தது.