வருமானத்தை குறைத்து காட்ட முயற்சி – ஹுவாய் மீது புகார்..!!
சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய், இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவில் Huawei:
சீனாவை சேர்ந்த மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் Huawei. இது மொபைல் ஃபோன், டிவி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. Huawei நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது.
வரி ஏய்ப்பில்Huawei:
இந்நிலையில், ஹுவாவே நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செய்த வர்த்தக பரிவர்த்தனைகளில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
வருமானத்தை குறைத்து காட்ட முயற்சி:
இதுதொடர்பாக வணிகவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, ஹுவாய் நிறுவனம் வருமானத்தைக் குறைத்துக் காட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டது, கடந்த மாதம் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது என்று பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறினார்.
தொலைத்தொடர்பு தயாரிப்புகளை விநியோகித்தல் மற்றும் கேப்டிவ் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் சேவைகளை வழங்கும் பன்னாட்டுக் குழுவை பிப்ரவரி 15-ம் தேதி, தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த வருமான வரி மோசடி குறித்து இன்னும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.