விலையை உயர்த்தும் ஆடி – விலையை கேட்டு ஆடி போகாதீங்க..!!
ஆடி கார் நிறுவனம் இந்தியாவில், அதன் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடம்பார கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, பெட்ரோலில் ஓடக்கூடிய ஏ4, ஏ6, ஏ8எல், கியூ2, கியூ5, கியூ7, கியூ8, எஸ்5 ஸ்போர்ட்ஸ்பேக், ஆர்எஸ்5 ஸ்போர்ட்ஸ்பேக் மற்றும் ஆர்எஸ் கியூ8 உள்ளிட்ட தனது மாடல் கார்களை இந்தியாவில் தற்போது விற்பனை செய்து வருகிறது. மேலும், ஆடி நிறுவனத்தின் மின்சார வாகனமான இ-டிரான் வரிசையில் 5 கார்களையும் இயக்கி வருகிறது.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், அதன் கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆடி நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறும்போது, மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், அந்நிய செலாவணியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக விலையை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளதாகவும், கார்களின் மாடல்களை பொறுத்து 3 சதவீதம் வரை அதன் விலை உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். ஆடி நிறுவனம் இந்தியாவில் நிலையான வணிக மாதிரியை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.