NSE-ல் மாற்றங்கள்..!! – கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்..!!
கடந்த சில ஆண்டுகளில் ஒழுங்குமுறை, தொழில்நுட்பம் மற்றும் கண்காணிப்புகளில் உதவுவதற்காக தேசிய பங்குச் சந்தை பல மாற்றங்களைச் செய்துள்ளது.
சந்தை துஷ்பிரயோகத்தைத் தடுக்க, பரிவர்த்தனைகளை கையாளுதல் நடைமுறைகளை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தியுள்ளதாக NSE எனப்படும் தேசிய பங்குச் சந்தை அமைப்பு தெரிவித்துள்ளது.
எந்தவொரு அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டவிரோத செயலையும் கண்டறிய வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்றவைகளை தேடுவதாக என்எஸ்இ தெரிவித்துள்ளது.
இப்போது வினாடிக்கு 3,00,000 ஆர்டர்களைச் செயலாக்கத் தயாராக செபியும் அதன் அமைப்புகளும் உள்ளன. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. பங்குச் சந்தை ஒரு நொடிக்கு 1 மில்லியன் ஆர்டர்களை செயலாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் தரவுகளை பகிர்ந்த விவகாரத்தில் அதன் முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், NSE இவ்வாறு தெரிவித்துள்ளது.