கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு – கிரெடிட் கார்டு செலவினங்கள் சரிவு..!!
2022 ஜனவரி மாதத்தில் கிரெடிட் கார்டு செலவினங்கள் 6 சதவீதம் சரிந்து விட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று காரணமாக விதித்த தடையின் காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்பட்டதால் ஜனவரி மாதத்தில் கிரெடிட் கார்டு செலவுகள் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட கார்டுகளின் அடிப்படையில், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ கார்டுகள் ஜனவரி மாதத்தில் 1,30,000 புதிய கிரெடிட் கார்டுகளைச் சேர்த்துள்ளன.
ஐசிஐசிஐ வங்கி ஜனவரியில் 2,40,000 கிரெடிட் கார்டுகளைச் சேர்த்தது, மொத்த கிரெடிட் கார்டு தளத்தை 12.5 மில்லியனாகக் கொண்டு சென்றது. அமேசானுடன் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு சந்தையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது,
ஆக்சிஸ் வங்கியும் அதே காலகட்டத்தில் 2,19,000 புதிய கார்டுகளைச் சேர்த்தது. வால்மார்ட் ஆதரவு பெற்ற இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் உடனான அதன் இணை முத்திரை கிரெடிட் கார்டும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் HDFC வங்கி 2,09,000 கிரெடிட் கார்டுகளைச் சேர்த்தது, ஆனால் அது இரண்டாவது மாதத்திற்கு சந்தைப் பங்கை 22.8% ஆக இழந்தது. எஸ்பிஐ கார்டுகளும், குறைவான கிரெடிட் கார்டுகளைச் சேர்த்ததால், சந்தைப் பங்கில் வீழ்ச்சி ஏற்பட்டது.