மிகப்பெரிய டேட்டா சென்டர் – Microsoft நிறுவனம் திட்டம்..!!
மிகப்பெரிய டேட்டா சென்டரை(Data Centre) இந்தியாவில் அமைக்க தொழில்நுட்ப நிறுவனமான Microsoft திட்டமிட்டுள்ளது.
Microsoft என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். நுகர்வோர் மின்னணுவியல், கணினி மென்பொருள், தனிப்பட்ட கணினிகள் தயாரிப்பு மற்றும் கணினி தொடர்பான சேவைகளை உற்பத்தி செய்து வருகிறது.
சத்யா நாதெல்லா தலைமையைிலான, இந்த தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மிக வேகமாக விரிவுப்படுத்தி வருகிறது. முக்கிய, முதன்மையான வர்த்தகத் தளமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் முயற்சிகளை எடுத்து வரும் Microsoft, இந்தியாவில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில், 4-வது மிகப்பெரிய Data Centre-ஐ அமைக்க திட்டமிட்டுள்ளது. இது சுமார் 2 பில்லியன் டாலர் செலவில் அமையும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் அனந்த் மகேஸ்வரி கூறும்போது, பொதுச்சேவைக்கான கிளவுட் டேட்டா சென்டர் மீது ஒருமுறை மட்டும் முதலீடு செய்தால் போதாது. தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்று தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தற்போதுள்ள 3 தரவு மையங்களின் Capacity-ஐ இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அனந்த் மகேஸ்வரி கூறினார். இந்திய நாட்டின் கிளவுட் சேவை சந்தை 2025-ம் ஆண்டுக்குள் 10.8 பில்லியன் டாலர் அளவை எட்டும் என IDC எனப்படும் சர்வதேச தரவு நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
அனைத்து இன்டர்நெட் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு டேட்டா சென்டரின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய கிளவுட் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமேசானின் ஆதிக்கத்தை குறைக்கும் விதமாக மைக்ரோசாஃப்ட் 4-வது மிகப் பெரிய டேட்டா சென்டரை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.