MTNL, BSNL விற்பனைக்கு.. – அடுத்த வியாபாரத்துக்கு தயாரான ஜீ அரசு..!!
ரூ.1,100 கோடி மதிப்பிலான இரண்டு பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) ஆகியவற்றின் ரியல் எஸ்டேட் சொத்துக்களை கிட்டத்தட்ட ரூ.1,100 கோடி ரிசர்வ் விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஹைதராபாத், சண்டிகர், பாவ்நகர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் சொத்துக்கள் சுமார் ரூ.800 கோடி ரிசர்வ் விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
DIPAM இணையதளம் மும்பையில் உள்ள வசாரி ஹில், கோரேகானில் உள்ள MTNL சொத்துக்களை விற்பனை செய்வதற்காக பட்டியலிட்டுள்ளது. சுமார் ரூ.270 கோடி கையிருப்பு விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஓஷிவாராவில் அமைந்துள்ள MTNL-இன் 20 அடுக்குமாடி குடியிருப்புகளும் நிறுவனத்தின் சொத்து பணமாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அடுக்குமாடி குடியிருப்புகளில் 1-அறை கொண்ட இரண்டு அலகுகள், 1 படுக்கையறை ஹால் மற்றும் சமையலறையின் 17 அலகுகள் (BHK) மற்றும் ஒரு அலகு 2 BHK ஆகியவை அடங்கும். அவற்றின் விலை ரூ.52.26 லட்சம் முதல் ரூ.1.59 கோடி வரைஇருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்டிஎன்எல் சொத்துகளுக்கான மின்-ஏலம் நடப்பு ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறும்.
இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் அடுத்த ஆண்டுக்குள் ரூ.37,500 கோடி மதிப்புள்ள சொத்துகளைக் கண்டறிந்து பணமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.