விண்ணப்பித்த 22 நாளில் OK.. LIC IPO-க்களுக்கு செபி அனுமதி..!!
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான LIC-யின் IPO-க்களுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது.
பங்குகளை விற்கும் LIC:
Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், விரைவில். LIC-யின் பொதுப்பங்குகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 14-ம் தேதி, LIC IPO-வுக்கான வரைவு அறிக்கை பிப்ரவரி 14-ம் தேதி, பங்குச் சந்தை காப்பீட்டு வாரியமான SEBI-யிடம் தாக்கல் செய்யப்பட்டது.
செபி அனுமதி:
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக எல்ஐசியின் ஐபிஓக்கன் விற்பனை தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், எல்ஐசியின் ஐபிஓக்களுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பொதுப்பங்குகளை விற்பதற்கு விண்ணப்பித்த எல்ஐசி விண்ணப்பித்த 22 நாட்களிலேயே செபி அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.