இந்திய பொருளாதாரத்துக்கு பாதிப்பு.. IMF எச்சரிக்கை..!!
உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு இந்தியாவை பெரிதும் பாதிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் என்று அழைக்கப்படும் IMF-ன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு மற்றும் அதன் உலகளாவிய தாக்கம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது, இந்தியா தனது நிதியை நிர்வகிப்பதில் மிகவும் சிறப்பாக உள்ளது என்றும், ஆனால், உலக அளவில் அதிகரித்துள்ள எரிசக்தி விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கூறினார். IMF-ன் முதல் துணை நிர்வாக இயக்குநராக உள்ள கீதா கோபிநாத், ”இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களுக்கு இந்தப் போர் சவாலாக இருக்கும்” என்று கூறினார்.
“இந்தியா எரிசக்தி இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளது . அவற்றின் விலைகள் அதிகரித்து வருவது, இந்திய குடும்பங்களின் வாங்கும் திறனில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் பணவீக்கம் சுமார் ஆறு சதவீதத்திற்கு அருகில் உள்ளது ” என்று கோபிநாத் கூறினார்.