8,337 காரட் கச்சா வைரம் – மின் ஏலத்தில் விற்பனை..!!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா வைரச் சுரங்கத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 8,337 காரட் வைரங்களை மின்-ஏலம் மூலமாக விற்கப்பட்டதாக என்எம்டிசி தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னாவில் NMDC தனது வைரச் சுரங்கத்தைக் கொண்டுள்ளது. இது நாட்டின் மொத்த வைர வளத்தில் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள ஒரே மாநிலமாகும். மஜ்கவான் பன்னாவில் உள்ள என்எம்டிசியின் வைரச் சுரங்கத் திட்டம் நாட்டிலேயே இயந்திரமயமாக்கப்பட்ட வைரச் சுரங்கமாகும்.
என்எம்டிசி மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அதன் பன்னா வைரச் சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத வைரங்களை விற்பனை செய்வதற்காக மின்-ஏலத்தை நடத்தியது. டிசம்பர் 2020-க்கு முன் தயாரிக்கப்பட்ட சுமார் 8,337 காரட் சுத்திகரிக்கப்படாத வைரங்கள் ஏலத்தில் விற்கப்பட்டன
மின்னணு ஏலம் சூரத், மும்பை மற்றும் பன்னா வைர வியாபாரிகளிடம் பெரும் வரவேற்பு பெற்றதாகவும் கூறியது, எனினும் மின்-ஏல செயல்முறை குறித்த கூடுதல் விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.