டிஜிட்டல் பொருளாதாரம் அதிகரிக்கும்..-அம்மையார் சொன்ன ஆரூடம்..!!
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் அதிகரிக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், இணையதள பயன்பாடு மற்றும் அதிகரிக்கும் வருமானத்தின் பின்னணியில் 2030 -ஆம் ஆண்டுக்குள் 800 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சி காணும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐஐடி பாம்பே முன்னாள் மாணவர் சங்கத்தின் நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், இந்தியாவில் 6,300 ஃபைன்டெக்கள் உள்ளன. அவற்றில் 28 சதவீதம் முதலீட்டு தொழில்நுட்பத்திலும், 27 சதவீதம் பணம் செலுத்துவதிலும், 16 சதவீதம் கடன் வழங்குவதிலும், 9 சதவீதம் வங்கி உள்கட்டமைப்பிலும் உள்ளன. அதேசமயம் 20 சதவீதத்துக்கு மேல் மற்ற துறைகளில் உள்ளன. எனவே அவை வெவ்வேறு செயல்பாடுகளில் பரவியுள்ளன என்று தெரிவித்தார்.
சில்லறை முதலீட்டாளர் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை, மார்ச் 2016 நிலவரப்படி சுமார் 45 மில்லியனிலிருந்து மார்ச் 31, 2021-க்குள் 88.2 மில்லியனாக இருமடங்காக அதிகரித்துள்ளது. இணையதள பயன்பாட்டில் 10 சதவிகிதம் அதிகரிப்பு, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி குறிப்பிட்டார்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், நாட்டின் 75 மாவட்டங்களில், திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் மூலம் 75 டிஜிட்டல் வங்கி பிரிவுகளை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன்,
யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) தொடர்பாக, பிப்ரவரியில் ரூ. 8.2 டிரில்லியனுக்கும் அதிகமான பரிமாற்றங்களை உள்ளடக்கிய 4.5 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.